சுவிட்சர்லாந்தில் மீண்டும் விமான சேவை
சூரிச் மற்றும் ஜெனீவா சர்வதேச விமான நிலையங்களிலிருந்து சில விமான சேவைகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.
இன்னும் சில, ஜூன் மாதம் 25ஆம் திகதி சுவிட்சர்லாந்து பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடனான தனது எல்லைகளை திறந்த பிறகு சேவையை துவங்க இருக்கின்றன.
இதற்கு முன் சூரிச்சிலிருந்து சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஆம்ஸ்டர்டாம், ஸ்டாக்ஹோம், ஏதென்ஸ். லிஸ்பன், லண்டன் ஹீத்ரோ, பெர்லின் மற்றும் போர்ட்டோ விமான நிலையங்களுக்கு செல்லத் துவங்கிவிட்டன.
சூரிச்சிலிருந்து நியூயார்க் செல்லும் நீண்ட தூர விமான சேவையும் தொடங்கிவிட்டது.
ஜெனீவாவிலிருந்து ஐரோப்பிய விமானங்கள், ஏதென்ஸ், லண்டன் ஹீத்ரோ, லிஸ்பன் மற்றும் போர்ட்டோ விமான நிலையங்களுக்கு சேவையை இயக்குகின்றன.
ஜூன் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள் நியூயார்க், சிகாகோ, மும்பை, பாங்காக், டோக்கியோ, வான்கூவர், ஷாங்காய் மற்றும் பிற நகரங்களுக்கு செல்லும் கண்டங்களுக்கிடையிலான விமான சேவையை துவங்க உள்ளது.
சமூக விலகலை பின்பற்றுவதற்காக விமானத்தில் நடுவிலிருக்கும் இருக்கைகளை அகற்றுவது குறித்த ஒரு பேச்சு இருக்கிறது.
ஆனால், எக்கனாமி வகுப்பில் அப்படி செய்தால், டிக்கெட் விலையை அதிகமாக உயர்த்தவேண்டியிருக்கும்.
எப்படியும், சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கும்போது ஆகத்து 31 வரையாவது பயணிகளை மாஸ்க் அணிந்துகொள்ள பரிந்துரைத்து வருகிறது.
அதுவும் எங்கெல்லாம் சமூக விலகலைப் பின்பற்ற முடியாதோ அங்கெல்லாம் மாஸ்க் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

Post a Comment