Header Ads



சவுதியில் பணிக்காக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், கொரோனா தடுப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் நாடு கடத்தப்படுவார்களா..?

சவுதி அரேபியாவி்ல் பணிக்காக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆயிரத்து 157 பேர் ஆகவும் 611 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபிய அரசு சமீபத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களை விருந்து, துக்க நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதித்துள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சிறிதுகூட தளர்வு காட்டவில்லை.

அந்நாட்டு பிறப்பித்த உத்தரவு குறித்து கல்ஃப் நியூஸ் கூறுகையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைபிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்

இந்த மீறுவோருக்கு முதலில் 1000 ரியால் அபராதமும், அடுத்த முறையும் அதே தவறைச் செய்தால் இருமடங்கு அபராதமும் விதிக்கப்படும். 2-வது முறை தவறை வெளிநாட்டினர் செய்தால் அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்

சவுதி அரேபியாவி்ல் உள்ள தனியார் நிறுவனங்களும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். ஊழியர்களுக்கு கிருமி நாசினிகள், சானிடைசர் வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. PUTHITHAAKA INNUM PALA SHINIMA KOTTAKAIKAL THIRANDAAL NANRAAKA IRUKKUM.SALMAANEY.
    MUSLIM NAADAAM ITHU.

    ReplyDelete

Powered by Blogger.