இனமத, பிராந்திய துருவமயப்படுத்தல்கள் அதிகரிப்பு - மாகாண முறையை கைவிட வேண்டும்
அரசியல் கட்சிகள் 13 வது திருத்தத்தையும் மாகாணசபை முறையையும் கைவிடுவது குறித்து சிந்திக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொராகொட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாகாணசபை முறையை நீக்கவேண்டும்,அதிகாரங்களை மறுசீரமைக்கப்பட்ட மாநாகர சபைகள்,நகரசபைகள் போன்ற உள்ளுராட்சி அமைப்புகளிற்கு வழங்கவேண்டும் என அவர் கருத்துவெளியிட்டுள்ளார்.
இந்த அமைப்புகள் மக்களிற்கு நெருக்கமாக உள்ளதன் காரணமாக சமூகமட்டத்தில் மக்களிற்கு எழும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான சிறந்த நிலையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கத்துடன் 1987 இல் 13வது திருத்தம் நடைமுறைக்கு வந்தபோதிலும் மாகாணசபைகள் மிதமிஞ்சியவை, செலவுமிக்கவை,பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை- திறமையற்றவை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.
எமது சமூகத்தில் இனரீதியான, மதரீதியான,பிராந்திய ரீதியிலான துருவமயப்படுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக சாத்தியமான ஜனநாயக வழிமுறைகளை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்தினை அடைவதற்கான பலனுள்ள வழி மதம் இனம் பிராந்திய பன்முகதன்மை போன்ற பிரச்சினைகளிற்கு தீர்வைகாணக்கூடிய மேல்சபையை உருவாக்குவதே என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள் குறித்த தங்களது நிலைப்பாட்டினை அரசியல்கட்சிகள் தெளிவாக தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கவேண்டும் என மிலிந்த மொராகொட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் இனங்களுக்கு எதிரான மிகப்பெரும் பிளவை உண்டுபண்ணியது நயவஞ்சக இந்தியாவால் திணிக்கப்பட்ட இந்த மாகாண சபை முறைமை. இதனால் விரிசல்கள் ஏற்பட்டதே தவிர எந்த இணைக்கப்படும் ஏற்படவில்லை. இம்முறை அரசாங்கம் இந்த மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்யுமானால் அதுவே சிறந்த தீர்மானம்
ReplyDelete