Header Ads



ரணில் விடுத்துள்ள, விசேட அறிவித்தல்

(எம்.மனோசித்ரா)

ஜனநாயக ஆட்சி சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஆகிய இரண்டையுமே முற்றாக ஒழித்துக்கட்டி சர்வாதிகார நிலைகொண்ட பூரண  இராணுவ ஆட்சியை நோக்கிய பயணமாகவே தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்பாடுகள் காணப்படுகிறது. 

எனவே இலங்கையில் மக்களை நேசிக்கக் கூடிய ஜனநாயக ஆட்சியை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட அறிவித்தலொன்றில் இதனைக் கூறிய அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது :

நாம் முன்னெடுத்த போராட்டத்தினால் நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்பன பாதுகாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு இந்த போராட்டத்தை ஆரம்பித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஜனநாயக உரிமைகளை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் அவரது செயற்பாடுகளைக் கூட இடைநிறுத்தக் கூடிய அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது. 

பொதுஜன பெரமுனவால் இவற்றுக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரையும் தலைவரையும் பகிரங்கமாகத் தூற்றுகின்றனர். 

பொலிஸ் அதிகாரிகளுடன் செயற்பட இராணுவத்தினரை நியமிக்கின்றனர். பொலிஸார் புறந்தள்ளப்பட்டுள்ளனர்.  ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று கூறிய முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் சடலம் அண்மையில் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டது. 

அரச சேவை ஆணைக்குழுவின் நிலைமையும் இது போலவே உள்ளது. அவர்களை மாற்ற முடியாத சந்தர்ப்பங்களில் இராணுவ வீரர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் திணைக்களங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுகின்றனர். அவர்களிடமே முக்கிய பொறுப்புக்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படுகின்றன. விசேட ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளன. எமது நாட்டிலுள்ள இராணுவத்தினர் உலகிலேயே சிறந்த வீரர்களாவர். போராட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கே அவர்கள் பொறுத்தமானவர்கள். அவற்றுடன் தொடர்புடைய பொறுப்புக்களை அவர்களிடம் கையளிக்கலாம். 

இலங்கையின் நிர்வாக சேவையை யுத்தத்திற்கு அனுப்பினால் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும். யாழ்ப்பாணத்திற்கு யுத்தத்திற்கு  அனுப்பினால் அது காலியிலேயே  நிறைவுக்கு வரும். அதில் திறமை இல்லை. ஆனால் நாட்டை நிர்வகிப்பதற்கு பிரதேச செயலகங்கள் , காணிகளுடன் தொடர்புடைய விடயங்கள் உள்ளட்டவற்றை செய்வதற்கு திறமை அத்தியாவசியமானதாகும். இதனை இராணுவத்தினரால் செய்ய முடியாது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார். 

2 comments:

  1. #சதிகாரர்களுக்கு #எல்லாம் #சதிகாரன் #அல்லாஹ் #ஒருவனே...!

    மஹிந்தவின் ஆட்சியை எப்படியும் வீழ்த்த முடியாது என்று நினைத்த ரணில் மாபெரிய சதி நாடகம் ஒன்றை நிறைவேற்றும் முகமாக ராஜித, சம்பிக்க போன்றோரின் துணையோடு அளுத்கமை பிரச்சினையை ஏற்படுத்தி அதனை உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களின் துணைகொண்டு ஊதி பெருப்பித்ததன் மூலம் முஸ்லிம்களை மஹிந்த அரசாங்கத்தின் மீது வெறுப்படைய வைத்து, காரியத்தை சாதித்து கொண்டார்கள்.

    இதற்கு நமது முஸ்லிம் தலைவர்களும் உடந்தையாக இருந்தது மட்டுமல்ல, இந்திய றோ அமைப்பினூடாக 20கோடிகளை லஞ்சமாக பெற்ற விடயங்களும் அவர்களுடைய கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களாலேயே பகிரங்கமாக பேசப்பட்டும் இருந்தது.

    தங்களுடைய அரசியல் சதிநாடகத்துக்கு அளுத்கம மக்களின் உயிர் உடமைகளில் விளையாடிய ரணில் அரசாங்கத்தையும், அதற்கு ஆதரவானவர்களையும் இன்று இறைவன் சின்னா பின்னமாக ஆக்கிவிட்டதுமல்லாமல் அவர்களுக்குள்ளேயே பிளவுபட்டு நாசமாகியும் போய் கிடக்கின்றார்கள்.

    எந்த தலைவனை சதி மூலம் ஆட்சியைவிட்டு நீக்கினார்களோ அதே தலைவனை மீண்டும் ஆட்சியதிகாரத்தில் மீண்டும் அமர்த்திவிட்ட இறைவனின் செயல்பாட்டை பார்த்து சூழ்ச்சிகாரர்கள் பாடம் படிப்பித்து கொள்ள வேண்டும்..!

    அதேநேரம் இவ்வளவு உண்மைகளையும் தெரிந்துகொண்டு பணத்துக்கும் பதவிக்கும் அடிமைப்பட்டு சமூகத்தை காட்டிக்கொடுத்த மு.தலைவர்களுக்கும் இறைவனின் தண்டனை கிடைத்து வருகின்றது என்றே கூறவேண்டும். இன்று அவர்களின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் செயல்போன்று ஆகிவிட்டது என்றே கூறவேண்டும்.

    எதிர்வரும் தேர்தல் அவர்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு சாவுமணிபோன்றே அமையப்போகின்றது எனலாம்.

    அநியாயக்காரர்களையும், அநியாயத்துக்கு துணைபோகின்றவர்களின் சூழ்ச்சிகளையும், இறைவன் அதிககாலம் அனுமதிக்கமாட்டான் என்பதே இதன் மூலம் தெரியவரும் உண்மையாகும்.

    ஆகவே உண்மையே என்றும் வெல்லும்,..சூழ்ச்சிகள் என்றுமே அழிந்தே தீரும் என்பதற்கு இதுவே உதாரணமாகும்...!

    ~#முனைமருதவன்♥-

    Mohamed Ibrahim

    ReplyDelete
  2. அம்பாறை பள்ளி உடைப்பு விடயமாக அதனை பார்க்க, கொழும்பில் இருந்து ஒலுவிலுக்கு வந்த தங்களுக்கு அப்பாறை பள்ளிக்கு செல்ல முடியாமல் கொழும்புக்கு திருப்பிப்போனமையும் ஜனநாயகம் என்றே சொல்லப்போகிறீர்கள். Ok.

    பொலிஸ் அதிகாரிகளும் மனிதர்கள் தான். இராணுவத்தினரும் மனிதர்கள்தான்.
    அவர்கள் அவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூலமாக கோரோணாவைக் கடுப்படுத்தியமையை இவ்விடத்தில் சிந்திக்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.