Header Ads



ஜேர்மனியில் சிக்கிய 235 இலங்கையர்கள், இன்று நாட்டிற்கு வந்தனர்

ஜேர்மனியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் 235 பேர் இன்று (06) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

இவர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜேர்மனியில் கப்பல் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றிருந்தபோது, கொரோனா தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், அந்நாட்டில் சிக்கியிருந்த 235 பேரே  இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இச்சிவில் கப்பல் பணியாளர்கள், ஜேர்மனியின் ஹெம்பர்க் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1206 எனும் விசேட விமானம் மூலம் இன்று முற்பகல் 11.55 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்த பயணிகளும், விமானப் பணியாளர்களும், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதற்காக கொழும்பு ஆசிரி வைத்தியசாலை பணியாளர்கள் மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக, விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.