Header Ads



முஸ்லிம்கள் நன்றி அற்றவர்களாக இருக்கக்கூடாது - பொதுஜன பெரமுன 2/3 பெறுவது நிச்சயம்

ஜனாதிபதி தேர்தலின் போது விட்ட தவறை முஸ்லிம் சமூகம் பொதுத் தேர்தலின்போது செய்ய முற்படக்கூடாது சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு செய்த நன்மைகளை மறந்த நன்றியில்லதவர்களாக மாறாக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி  சட்டத்தரணி பைசர் முஸ்தபா முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரித்து அக கட்சியின் வெற்றியை பங்காளிகளாக முஸ்லிம்களும் மாற வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களை கோட்டாபய ராஜபக்சவை  ஆதரிக்க வில்லை என்பதற்காக அவரை தோற்கடிக்க முடிந்ததா?

அதில் தோற்றுப் போனவர்கள் யார் முஸ்லிம் சமூகம் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதே சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம்.   மீண்டும் ஒரு தடவை அந்த தவறை செய்யவும் கூடாது

இந்த நாட்டில் முஸ்லிம்கள் உயர்ந்த பதவிகளில் அத விடுங்க எங்களையும் வாழ முடிந்தது என்றால் அது சுதந்திரக் கட்சி அரசுகளில் தான் என்பதை மறக்க கூடாது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறுபான்மை மக்களின், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நண்பராகவே இருந்து வந்துள்ளார். முஸ்லிம் நாடுகளை நட்பு நாடுகளாக ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நாம் சுதந்திரக் கட்சி அரசியலில் அனுபவித்த நன்மைகளை நினைத்துப் பார்க்க வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இனவாத செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களாக நடவடிக்கை எடுத்தது யார் அன்றைய சுதந்திரக் கட்சியியும்  இன்றைய பொதுஜன முன்னணியும் தான்.

சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியல் லாபத்திற்காக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைமைகள் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தை முஸ்லிம் சமுகத்தை பலிகேடாகவே பயன்படுத்தி கொண்டனர். சுதந்திரத்தை பயன்

இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் அரசியல் வரலாறு நெடுகிலும் ஏமாற்றப்பட்டு கொண்டே உள்ளனர். முஸ்லிம்கள் இனி ஏமாறக் கூடாது சிந்தித்துச் தீர்க்கமான  முடிவு எடுத்து வர வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது வெறேந்த சக்தியோ  இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அக்கட்சிகள்  சிதறுண்டு போகியுள்ளன. நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன நிச்சயமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி வாகை சூடும்

அந்த வெற்றியில்  முஸ்லிம் சமூகமும் பங்காளிகளாக இருக்க வேண்டும்  பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை முஸ்லிம் சமூகம் வென்றெடுக்க முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா முஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எம் ஏ எம் நிலாம்

8 comments:

  1. இவரை போன்ற ஒரு அரசியல் சாக்கடையை எங்குமே காணமுடியாது. ராஜபக்ச அரசாங்கத்தை விட்டு 2014 ஆம் ஆண்டு இவர் வெளியேறும் பொழுது கூறியதும் இப்போது கூறிவதும். இவனுடைய அரசியல் கேவலத்தை காட்டுகின்றது. உங்களுடைய அரசியல் வாழ்க்கையெல்லாம் முடிந்துவிட்டது இனியாவது இஸ்லாமிய நெறியை கடைபிடித்து வாழைப்பழகுங்கள். சிங்கள கலாசாரத்துக்கு சமமான வாழ்க்கை வாழும் இவர் முஸ்லிம்களை பற்றி போலியாக கவலைகொள்ள தேவையில்லை

    ReplyDelete
  2. If the Rajapakses get 2/3 majority that will be end of Muslims and Upcountry Tamils parliamentary seats.

    ReplyDelete
  3. இந்த அரசாங்கத்தில் ஏதாவது பதவி தனக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

    ReplyDelete
  4. எரிப்பது இல்லை என்று, என்று
    எரிவீர்களோ ஓர் சொல்லை, அன்றே
    ஏரிட்டுப் பார்ப்போம் என்னா என்று.
    எழும்புத் துண்டுக்காய் அலைபவர் நாமல்ல.

    ReplyDelete
  5. "The Muslim Voice" constantly said about these "MUNNAAFQUE" so-called Muslim politicians. Faizer Musthapa has proven beyond the predictions of "The Muslim Voice" since June 14th., 2019. THE MUSLIM VOTE BANK SHOULD BE ALERT ABOUT THIS DECEPTIVE POLITICIAN NOW AND IN THE FUTURE. HIS NOW EXPRESSING THAT HIS ONE VOTE CAN BE ADDED TO GOTABAYA/SLPP, BUT THE MUSLIMS SHOULD CHASE HIM TO THE WILDERNESS OF THE POLITICAL FIELD OF SRI LANKA AND THE POLITICAL PLAYING GROUND OF THE MUSLIMS. MORE OVER, MAHINDA RAJAPAKSA, GOTABAYA RAJAPAKSA AND BASIL RAJAPAKSA SHOULD KEEP FAIZER MUSTHAPA AWAY FROM THEIR THE SLPP/SLFP GROUP, BECAUSE THIS GUY WILL TRY IS TRYING TO CRAWL BACK TO THE MAHINDA/GOTABAYA/BASIL SLPP GROUP FOR PERSONAL POLITICAL GAINS. MUSLIMS PLEASE BE CAREFULL OF THIS POLITICIAN, Insha Allah.
    Noor Nizam.
    Convener "The Muslim Voice".

    ReplyDelete
  6. ahhhhaaaa really ?????

    ReplyDelete
  7. Mr faizar Musthafa srilanka is a democratic country.each and every citizens have fully rights to vote wich we like.you cannot forced any one to vote .Govt cant bring peace .only allah can do what ever (corona has proofed this matter)world leaders scientist richest people All are shut down by allah (reason of Corona)

    ReplyDelete
  8. இந்த அரசாங்கம் 2/3 பங்கு பெரும்பான்மை பெற முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவதானது தமது இரண்டு கரங்களாலும் மண்ணை அள்ளி எடுத்து தமது தலையில் போடுவதற்கு சமனாகும்.

    ReplyDelete

Powered by Blogger.