Header Ads



பலாமர கிளை உடைந்து, மின்கம்பி அறுந்து, லொறி மீது வீழ்ந்து 2 பேர் பலி

மாத்தளை – மஹஉல்பத்த பகுதியில் அதிவலுவுடைய மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விற்பனைக்காக பலா உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் லொறியொன்றின் மீது அதிவலுவுடைய மின்கம்பிகள் அறுந்து வீழந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலா மரத்தின் கிளையொன்று உடைந்து வீழ்ந்ததையடுத்து மின்கம்பி அறுந்து லொறி மீது வீழ்ந்துள்ளது.

இதன்போது லொறியில் மூவர் இருந்துள்ளதுடன், இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மற்றையவர் லொறியில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செலகம மற்றும் மஹவெல பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.