Header Ads



தந்தையை தேடிச்சென்ற பொலிஸார் 14 வயது மகனை அழைத்து சென்றனர் – எல்பிட்டியில் சம்பவம் - சமூக ஊடகங்களில் எதிர்ப்பு


- Rajeevan Arasaratnam -

எல்பிட்டியில் தந்தையை விசாரணை செய்வதற்காக வீட்டிற்கு சென்ற பொலிஸார் அவர் இல்லாததன் காரணமாக 14 வயது மகனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன

பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. வீட்டிற்கு விசாரணைக்காக சென்ற பொலிஸார் குறிப்பிட்ட நபர் வீட்டில் இல்லாததை தொடர்ந்து அவரின் 14 வயது மகனை பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

திருடப்பட்ட பொருட்கள் தொடர்பில் நபர் ஒருவரின் வீட்டிற்குசென்ற காவல்துறையினரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த தந்தை உடனடியாக பொலிஸ்நிலையம் சென்றதை தொடர்ந்து காவல்துறையினர் 14 வயது சிறுவனை விடுவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு டுவிட்டரில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

ராஜிதசேனராட்ணவை தேடியவேளை பொலிஸார் அவரது மகனை பிடித்துச்சென்றார்களா அல்லது ரவிகருணாநாயக்கவை தேடியவேளை அவரது பெண்பிள்ளைகளை பிடித்துச்சென்றார்களா என்பது தெரியவில்லை என பதிவு செய்துள்ள ஒருவர் இது பொதுமக்களிற்கானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் வேகமாக சர்வாதிகாரத்தை நோக்கி நகருகின்றோம் என மற்றுமொரு நபர் பதிவிட்டுள்ளார்.

இது சட்டபூர்வமானதா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ள வேளை மற்றொருவர் காவல்துறையினருக்கு எந்த சட்டமும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. 14 YEAR OLD BOY... UNDER WHAT LAW THEY TOOK HIM ?

    They should be brought under law.. If left this type of arragance will continue..

    ReplyDelete

Powered by Blogger.