Header Ads



கழுத்தை முழங்காலால் ஈவிரக்கமற்ற முறையில் நெரித்த பொலிஸ் - கறுப்பினத்தவர் பலி, அமெரிக்காவில் அகோரம்

கறுப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவரை ஈவிரக்கமற்ற முறையில் அமெரிக்க காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மினொசொட்டாவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

அமெரிக்க காவல்துறையை சேர்ந்த ஒருவர் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரின் கழுத்தை தனது முழங்காலால் மிதிப்பதை காண்பிக்கும் வீடியோவொன்று வெளியாகியுள்ளது.

ஜோர்ஜ்புளொயிட் என்ற அந்த நபர் தன்னால் சுவாசிக்க முடியாமலுள்ளது என அலறுவதை அந்த வீடியோவில் கேட்கமுடிகின்றது.

என்னால் சுவாசிக்க முடியவில்லை என்னை கொலைசெய்யாதீர்கள் என அவர் கதறுகின்றார்.

அதன் பின்னர் அவர் உடலில் எந்தவித அசைவுகளுமின்றி நிலத்தில் காணப்படுகின்றார்.

இந்த கொலைக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கறுப்பின நபர் உயிரிழந்த பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் முகக்கவசங்களை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜன்னல்களை சேதப்படுத்தியதுடன் வாகனங்களை படங்களை வரைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நான்கு பொலிஸாரும் பணிநீக்கப்பட்டுள்ளதுடன் எவ்பிஐ இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஒரு ஐந்து நிமிடங்கள் வெள்ளையின பொலிஸ் உத்தியோகத்தர் கறுப்பினத்தை சேர்ந்த நபரின் கழுத்தில் காலை வைத்து மிதித்ததை பார்த்தோம் என மினியாபொலிஸ் மேயர் ஜகொப் பிரை தெரிவித்துள்ளார்.

ஐந்து நிமிடங்கள் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அடிப்படை மனித உணர்வை கூட இழந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புளொயிட்டின் மரணம் நிகழ்ந்திருக்க கூடாது என தெரிவித்துள்ள மேயர் புளொயிட்டின் குடும்பத்தவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

1 comment:

  1. மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

    (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    ReplyDelete

Powered by Blogger.