தேர்தல் எப்போது என்பது தெரியாத நிலையில், வாக்குச்சீட்டுகளை அச்சிடுமாறு உத்தரவிட்டது ஏன்..?
வாக்குச்சீட்டுகளை அச்சிடுமாறு அரசாங்கம் ஏன் உத்தரவிட்டுள்ளது என்பது தெரியவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர்ரத்னஜீவன் ஹூல் கருத்து வெளியிட்டுளளார்.
தேர்தல் எப்போது இடம்பெறும் என்பது குறித்த தெளிவான திகதிகள் எதுவும் உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில் வாக்குசீட்டுகளை அச்சிமாறு உத்தரவிடப்பட்டுள்ளதை முன்கூட்டியே முன்னெடுக்கப்படும் அவசரப்பட்ட நடவடிக்கையாக நான் பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டு புதிதாக வேட்புமனுக்களை தாக்கல் செய்யவேண்டிய நிலையேற்பட்டால் என்ன செய்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் முதலில் நிறைவடையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னமும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை,நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

edu kuda triya ku mut ta ku mutta mudla adicah taanaa kala vode poda mudium
ReplyDelete