Header Ads



நாளை உயர்நீதிமன்றத்திற்கு வரும், முக்கிய விவகாரம் - பிரபல சட்டத்தரணிகள் முன்னிலையாகிறார்கள்

2020ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்பு ஏற்பாடுகளின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்மையானால் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் பிரகடனத்தை வெற்றும் வறியதாகவும் உத்தரவிடும்படி ஏழு அடிப்படை மனித உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்கள ஆணையாளர் மகிந்த தேசபிரிய அதன் அங்கத்தவர்களான அபேசேகர, எஸ்.ரட்னஜீவன் ஹூல் சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜயசிங்க ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்களை மனுதாரர்களான முன்னாள் அமைச்சர்களான பாட்டலி சம்பிக ரணவக்க, குமார வெல்கம,சிரேஸ்ட ஊடகவியளாளர் விக்டர் ஜவன், ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன. பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் அரசியல் கட்சியான சமகி ஜனபல வேகயவும், மற்றும் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் உட்பட எட்டு இடையீட்டு மனுதாரர்களுமாக இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுதாரர்களுக்காக முன்னாள் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர்களான ஜனாதிபதி சட்டத்தரணிகள் இக்ராம் மொகமட் ஜிப்ர், அழகரட்னம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்ஜீவ ஜயவர்தன, ஆபிகாம் சுமந்திரன் சிரேஸ்ட சட்டத்தரணிகளான விரான் கொரியா, சுரேன் பெர்னான்டோ ஆகியோர் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வழக்குக்கு எந்தவொரு சட்டத்தரணியும் தனிநபராக உரிமைகோரமுடியாத நிலை காணப்படுகிறது. ஏன்னெனில் இவ் வழக்கை பிரபல சட்டத்தரணிகள் பலர் இணைந்து தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.