Header Ads



நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கும், பிராந்திய அமைதிக்கும் இந்தியா அச்சுறுத்தல் - இம்ரான்கான்

நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கும், பிராந்திய அமைதிக்கும் இந்தியா அச்சுறுத்தலாக இருப்பதாக பாக். பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியா  மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

இந்திய அரசின் விரிவாக்க கொள்கைகளில் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. வங்காள தேசத்துடன் குடியுரிமை சட்டத்தின் வாயிலாகவும், சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதல்களாலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

மேலும் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

காஷ்மீரை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்துள்ளது இந்தியா செய்துள்ள போர்குற்றமாகும். நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கும் மட்டுமின்றி பிராந்திய அமைதிக்கும் இந்தியா அச்சுறுத்தலாக இருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. That is true. As long as Modi and his terrorist outfits rule India, it's going to be a problem for minority, in particular to Muslims and neighbors like Pakistan, Bangladesh, Nepal, Bhutan, China.

    ReplyDelete
  2. உண்மைதானே. BJP ஆட்சியில் இருக்கும்வரை ஏழைகளுக்கு திண்டாடடம் BJP யினருக்கு கொண்டாட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.