Header Ads



ரணில் விக்ரமசிங்கவின் மற்றுமொரு தோல்வியான வங்குரோத்து முயற்சி

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய போவதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பரப்புரரைகள் ரணில் விக்ரமசிங்கவின் மற்றுமொரு தோல்வியான வங்குரோத்து முயற்சி என ஐ.ம.சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அரசியல் அடிப்படையின்றி தர்க ரீதியாக பார்த்தால் இது உறுதியாகும். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளவர்கள் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தால், அவர்களுக்கு பொதுத் தேர்தலில் கட்சியினர் வாக்களிக்க மாட்டார்கள்.

இதனால், எவரும் ரணில் விக்ரமசிங்க கூறுவது போல் அரசியல் ரீதியான தற்கொலை செய்துக்கொள்ள மாட்டார்கள்.

நான் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவுடன் பணியாற்றியுள்ளேன். அவர் இப்படியான தந்திரோபாயங்களை கையாண்டு வந்துள்ளார். அவை அன்று வெற்றி பெற்றாலும் தற்போது காலம் கடந்த தந்திரோபாயங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைய விரும்பும் எவராவது இருந்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க, கட்சியின் சட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவது பெரும்பாலும் கேலிக்குரியது எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஏற்கனவே ஒரு கட்சியைை 28 வருடங்களாகத் தோல்வியடையச் செய்து மற்றொரு கட்சியை எந்த காரணம் கொண்டும் பதவிக்கு வராமல் இருக்க அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியை தோல்வியடையச் செய்வது தான் இந்த ஆசாமியின் பணி. இதனை அதன் தலைவர்கள் இன்னும் விளங்கிக் கொள்ளாமை ஆச்சரியத்துக்கும் அவமானத்துக்கும் உரிய விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.