Header Ads



வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் அனைவருக்கும் கிசிச்சை – சமூகத்திற்குள் பரவலிற்கு இடமளிக்கமாட்டோம்-


இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா பரவும் நிலை ஏற்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
வைரஸ்பரவலை தடுப்பதற்காக சுகாதார பிரிவுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தீவிரகவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் கையாளப்படுகின்றனர் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் கடுமையான சுகாதாரவழிமுறைகளை பின்பற்றி கையாளப்படுகின்றனர் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அழைத்து செல்லப்படும்போதும் நோயாளிகள் என உறுதியான பின்னர் மருத்துவமனைக்கு அவர்களை கொண்டுசெல்லும்போதும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் அனைவருக்கும் மருத்துவகிசிச்சை வழங்கப்படும் அவர்கள் நோயாளிகள் இல்லை என்றாலும் கிசிச்சை வழங்கப்படும் அதேவேளை வைரஸ் சமூகத்திற்குள் பரவாத சூழல் உறுதிசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.