Header Ads



ஆறுமுகத்தின் உடல், இன்று தகனம் செய்யப்படும்


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்னும் சற்றுநேரத்தில் நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது

இறம்பொடை, வேவண்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் நேற்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பொலிஸாரின் அனுமதியை பெற்றவர்கள் உடல் வெப்பநிலையை அளவிட்ட பின்னர் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நோர்வூட் மைதானத்திற்கு கொண்டு செல்லப்படும் அமரரின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் நிறைவடைந்த பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இறுதிக்கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நோர்வூட் மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்டளவானவர்களே மைதான வளாகத்துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணுவம், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுமந்திரன் ,ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினர். 

இதேவேளை, இறுதிக் கிரியைகளுக்கள் இடம்பெறும் நோர்வூட் மைதானத்தில் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கூடியுள்ளனர்.


No comments

Powered by Blogger.