Header Ads



எனது மனைவியை, அநியாயமாக எரித்து விட்டார்கள், அழுதபடி நீதி கேட்கிறார் கணவர்

- அன்ஸிர் -

சாதாரணமாக வபாத்தான எனது மனைவியை கொரோனா தொற்றுள்ளதாக கூறி, அநியாயமாக எரித்து விட்டார்கள். இச்செயலுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் எமக்கு நீதியும் பெற்றுத்தரப்பட வேண்டுமென அவரது கணவர் மொஹமட் சபீக் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துகுறித்து அவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டதாவது,

என்னுடைய மனைவியின் பெயர் பாத்திமா றினோஸா. 1976 ஆம் ஆண்டு பிறந்தவர். வபாத்தாகும் போது அவருக்கு 44 வயது. 

எனக்கு 6 பிள்ளைகள். ஒருவர் திருமணம் முடித்து விட்டார். எனது குடும்பத்தில் 3 உலமாக்கள். ஒருவர் ஹாபிஸ். 2 பெண் பிள்ளைகள்  இன்னும் திருமணம் முடிக்கவில்லை.

எனது மனைவி மௌத்தானதாக அறிவிக்கப்பட்ட நாளன்று எங்களைச் சுற்றி என்ன நடந்ததென்றே தெரியவில்லை.

திடீரென வீட்டுக்கு வந்தவர்கள், எமது வீட்டு அலுமாரி உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் மருந்து அடித்தார்கள். எங்களை அநுராதபுரத்தில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பினார்கள்.

மனைவி மௌத்தான பின், அவரைப் பார்வையிடவோ அல்லது ஜனாஸா தொழுகையில் பங்கேற்வோ எமக்கு அனுமதி தரவில்லை. திருமணம் முடித்து தனியாக வாழும் எனது மகன் மாத்திரமே ஜனாஸா தொழுகையில் பங்கேற்றார்.

பின்னர் எனது மனைவியை தகனம் செய்து விட்டார்கள். சாம்பலையும் புதைத்து விட்டார்கள்.

நாங்கள் பெரும் துன்பத்தில் உள்ளோம். மனக் கவலையில் இருக்கிறோம்.

சாதாரணமாக மரணித்த எனது மனைவியை கொரோனா தொற்றாளர் எனக்கூறி தீயில் பொசுக்கி விட்டார்கள் (அழுகிறார்) 

எனது மனைவிக்கும், எங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். உரிய தரப்பினர்கள் இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும் என்றார் உருக்கமாக.

அதேவேளை மர்ஹுமா பாத்திமா றினோஸாவின் மகன் சப்ரினும் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் உரையாடினார்.

இதுபோன்ற சம்பவம் எவருக்கும் நடந்துவிடக் கூடாது. எங்களுக்கு நீதி பெற்றுத்தரப்பட வேண்டுமென்றார் அவர்.

4 comments:

  1. அமைதியாக இருங்கள்.அழ்ழா போதுமானவன். அநியாயம் இழைக்கப்பட்டவனின் துஆவுக்கு திரையில்லை. வெகுவிரைவில் உங்கள் கண் முன்னே அவர்களுக்கு அழ்ழா பதிலளிப்பான். பொறுமையைக்கொன்டும் தொழுகையை கொண்டும் அழ்ழாவிடம் உதவி தேடுங்கள். உலமாக்களை பெற்ற தாயின் சாபம் சும்மா விடுமா.

    ReplyDelete
  2. allahvidam murayindungal.allah awerhalay paarthukkolluwan.

    ReplyDelete
  3. அநியாயம் இழைக்கப்பட்ட உங்களின் துஆ நிச்சயம் அந்கீகரிக்கப்படும். அது அவர்களது ஹிதாயத்துக்காக வேண்டி கேட்டாலும் அதுவும் கிடைக்கலாம் இன்சா அல்லாஹ்.

    ReplyDelete
  4. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 3:30)

    ReplyDelete

Powered by Blogger.