Header Ads

பணத்திற்காக அல்லல்பட்டு உயிரை விட்டது, மாளிகாவத்தையுடன் நின்றுவிடட்டும்...

தனவந்தர்களே! நீங்கள் வருடம் முழுவதும் உழைத்து கணக்குப்பார்த்து வழங்கும் ஸகாத் பயன்படப்போவது இரண்டு நாளில் செலவழிப்பதற்கா அல்லது அதன்மூலம் இன்னொருவர் சொந்தக்காலில் எழுந்து நின்று அடுத்த பல வருடங்களில் அவரும் ஸகாத் கொடுப்பவராக மாறுவதற்கா என்பதை சற்று ஆழமாக சிந்தித்து பாருங்கள். 

நம் நாட்டு அரசியல் வாதிகள் போன்று மக்கள் என்றென்றும் வறுமையில் வாழவேண்டும் என்று என்னாதீர்கள். நாம் அடிமைச்சமூகமாக இருக்கும் வரைதான் நமக்கெதிராக பல்வேறு சதிகள் நிகழ்த்தப்படும். ஏனெனில் யாருக்கும் கேள்வி கேட்க நாதியில்லை. கேள்வி கேற்பவரிடமும் போதிய பலமில்லை. 

ஒருவரின் ஸகாத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்தை வறுமையிலிருந்து விடுதலை பெறச்செய்ய முடியுமாயின் நமது சமூகம் இன்னும் பல வருடத்தில் தலை நிமிர்ந்து நின்றுவிடும். நமது ஸகாத்தை திட்டமிட்டு பகிர்ந்தளிப்போம். அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுவோம். 

பணத்திற்காக அல்லல்பட்டு உயிரை விட்டது மாளிகாவத்தையுடன் நின்றுவிடட்டும்.

BJMZ

4 comments:

  1. குளி்க்க போய் சேறு பூசிய கதை..

    ReplyDelete
  2. சகாத் பெற தகுதியுடைய எல்லோருக்கும் சகாத்திலிருந்து பெற்றுக் கோள்வதற்கு உரிமையுண்டு. சிறிதளவாயினும் அதனை பெறத் தகுதியுடையோருக்கு முறையாக, இஸ்லாம் அங்கீகரிக்கின்ற முறையில் கிடைக்கச் செய்யவது தனவந்தர்களின் கடமையாகும்.
    இவ்வாறு இருக்க, ஒருத்தருக்கே மற்றவர்களுக்கும் உரித்தாவதையும் சேர்த்து (பறித்து) கொடுத்து அவரை தனவந்தராக்கிவிட வேண்டும் என்பது இஸ்லாமியப் பார்வையல்ல. அடுத்தவன் பசித்திருக்க ஒருத்தனின் வயிற்றை நிரப்பி முட்டச் செய்வது இஸ்லாமாகுமா? பசித்திருக்க வேண்டியிருப்பது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்று வந்துவிட்டால் இதனை ஏற்றுக் கொள்வீர்களா? சிந்தியுங்கள் BJMZ.

    ReplyDelete
  3. சகாத் பெற தகுதியுடைய எல்லோருக்கும் சகாத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு உரிமையுண்டு. சிறிதளவாயினும் அதனை பெறத் தகுதியுடையோருக்கு முறையாக, இஸ்லாம் அங்கீகரிக்கின்ற முறையில் கிடைக்கச் செய்யவது தனவந்தர்களின் கடமையாகும்.
    இவ்வாறு இருக்க, ஒருத்தருக்கே மற்றவர்களுக்கும் உரித்தாவதையும் சேர்த்து (பறித்து) கொடுத்து அவரை தனவந்தராக்கிவிட வேண்டும் என்பது இஸ்லாமியப் பார்வையல்ல. அடுத்தவன் பசித்திருக்க ஒருத்தனின் வயிற்றை நிரப்பி முட்டச் செய்வது இஸ்லாமாகுமா? பசித்திருக்க வேண்டியிருப்பது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்று வந்துவிட்டால் இதனை ஏற்றுக் கொள்வீர்களா? சிந்தியுங்கள் BJMZ.

    ReplyDelete
  4. சகாத் பெற தகுதியுடைய எல்லோருக்கும் சகாத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு உரிமையுண்டு. சிறிதளவாயினும் அதனை பெறத் தகுதியுடையோருக்கு முறையாக, இஸ்லாம் அங்கீகரிக்கின்ற முறையில் கிடைக்கச் செய்யவது தனவந்தர்களின் கடமையாகும்.
    இவ்வாறு இருக்க, ஒருத்தருக்கே மற்றவர்களுக்கும் உரித்தாவதையும் சேர்த்து (பறித்து) கொடுத்து அவரை தனவந்தராக்கிவிட வேண்டும் என்பது இஸ்லாமியப் பார்வையல்ல. அடுத்தவன் பசித்திருக்க ஒருத்தனின் வயிற்றை நிரப்பி முட்டச் செய்வது இஸ்லாமாகுமா? பசித்திருக்க வேண்டியிருப்பது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்று வந்துவிட்டால் இதனை ஏற்றுக் கொள்வீர்களா? சிந்தியுங்கள் BJMZ.

    ReplyDelete

Powered by Blogger.