Header Ads



றினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு


கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய கணவருக்கோ அல்லது ஜனாஸா தொழுகையில் பங்கேற்கவோ அனுமதியளிக்கப்படவில்லை என வபாத்தானவரின் மகன் சப்ரின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டதாவது,

இன்று வபாத்தான எனது உம்மாவை எரியூட்டுவதற்காக என்னிடம் கையொப்பம் கேட்டார்கள். நான் மறுத்தேன், அதில் பிடிவாதமாக இருந்தேன். எனினும் அவர்கள் பலாத்காரமாக என்னிடம் கையொப்பத்தை பெற்றார்கள்.

எனது உம்மாவுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினோம்.  

எனினும் எனது உம்மாவின் ஜனாஸாவை பார்வையிடவோ அல்லது அவருக்காக தொழுகை நடத்தவோ எனது வாப்பாவை அனுமதிக்கவில்லை. பலாத்காரமாக எங்கள் குடும்பத்தை அநுராதபுரத்திற்கு ஏற்றி அனுப்பி விட்டார்கள்.

இது பெரும் அநீதியானது. நாங்கள் கவலையடைந்துள்ளோம். ஏமாற்றமடைந்து உள்ளோம். மனைவியின் முகத்தை கணவருக்கு காட்டாமையும், ஜனாஸா தொழுகையில் கணவரை அனுமதிக்காமையும் நியாயமா..?

இந்த புனித ரமழான் காலத்தில் உங்கள் பிரார்த்தனையில் எங்கள் உம்மாவையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார்

4 comments:

  1. முஸ்லிம்கள் ஊரடங்கு சட்டம் தளர்ந்த நாட்களில் எல்லாமிடமும் ஆர்பாட்டங்கள் செய்யவேண்டும் தங்களின் உரிமைக்காக உலகு எங்கும் கொரோன நோயினால் மரணித்தவர்கள் அடக்கும் செய்யும் போது ஏன் இலங்கையில் மட்டும் தகனம் செய்கின்றன அதை சுற்றி காட்டி விழிப்பு ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்.

    ReplyDelete
  2. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  3. அப்துல் க்கு பணிவான ஒரு வேண்டுகோள். இந்த செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனால் தற்போது ஆர்ப்பாட்டம் செய்யும் நேரமல்ல. அவ்வாறு ஆர்ப்பாட்டங்களை தொடங்கினால் அவர்கள் அனைவரும் ஊரடங்குச்சட்ட மீறல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.பின்பு அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு இல்லை. உயர் நீதிமன்றத்தில்தான் பிணை எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது ஆறு மாதமாவது சிறையில் வாட வேண்டும். இத்தகைய சட்டங்கள் குறிப்பாக முஸ்லிம்களுக்கு நூற்றுக்கு நூறு அமல்நடாத்தப்படுகின்றது. எனவே எமது சமூகத்தின் நம்பிக்ைகக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் மேற்கொண்ட இந்த அநியாயத்தை நாம் அல்லாஹ்விடம் முறையிடுவோம். முகத்தை மூடினால் பயங்கரவாதி என குத்திக்காட்டிய காவிகள் அனைவரினதும் முகத்தை மூடாது வௌியேறுவது குற்றம் என அல்லாஹ் காவிகள் அனைவருக்கும் அல்லாஹ் தஆலா எச்சரிக்கை விடுத்தான். அந்த எச்சரிக்ைகக்கு மேல் யாரும் செல்ல முடியாது. எனவே முஸ்லிம்களுக்கு எதிராக யாரெல்லாம் சூழ்ச்சி செய்கின்றார்களோ அவற்றை அல்லாஹ்விடமே முறையிட்டு அதற்கான தீர்வை எதிர்பார்ப்போம். அது தவிர இந்த அநியாயத்துக்கு இந்த உலகில் தீர்வு கிடையாது.

    ReplyDelete
  4. அமைதியும்,பொறுமையும், பிரார்த்தனையுமே இன்நன்நாள்களில் எம்மை மேம்படுத்தும் என இறைவன் மீது நம்பிக்கை கொள்வோமாக.

    ReplyDelete

Powered by Blogger.