Header Ads



குவைத்திலிருந்து உருக்கமான வேண்டுகோள்...

அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்

இலங்கை வாழ் சகோதரர்களே..!

வெளிநாட்டிலிருக்கும் நாங்கள் ஏற்கனவே செத்துப்பிழைத்து வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கின்றோம்.

உறவுகளைப்பிரிந்து தனிமை என்ற அவஸ்தையோடு, மிகக்கடினமான வேலைகளில் ஈடுபட்டாலும், தம் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை மிச்சப்படுத்தி சமூகத்தின் பங்கு என்று வழங்கியவர்கள் இன்று எண்ணற்ற பல சிரமங்களை அனுபவிப்பதானது, மனதைக் குடைகின்றது.

சரியான உணவில்லாமல், சம்பளங்களில் குறைபாடுகளோடு, அவசரமான அவசியமான தேவைகளுக்குக்கூட சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் தாய், தந்தையரைப்பிரிந்து, மனைவி மக்களைப்பிரிந்து ஏக்கங்களைச்சுமந்து, குடும்ப உறவுகளிடம் கவலைகளை மறைத்து, தம் முகத்தில் போலியாய் சந்தோசத்தை வரவழைத்து, பேசிப்பழக வேண்டிய சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

தாய், தந்தைக்கு, மனைவி, பிள்ளைகளுக்கு இதனைச்சொல்லி அவர்களையும் கஷ்டப்படுத்தக்கூடாதென்று தமக்குள்ளே தம் வலிகளோடு, மறைத்து வைத்துக்கொண்டு, உள்ளூர அழுது கொண்டிருக்கும் எமது மனது அவஸ்தைப்படுகின்றது. 

 நான் முந்தி நீ முந்தி என்று இல்லாத பொய்யான செய்திகளை, வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

இறைவனைப்பயந்து கொள்ளுங்கள்.

குவைத்தில் உள்ளவர்களும் இவ்வாறான தவறான செய்திகளைப்பரப்பி வருகின்றீர்கள். இதனால் நீங்கள் அடைந்த பயன் என்ன? மேலும், இவ்வாறான கேவலமான இறந்தவர்களின் குடும்பத்தின் வேதனையை சாபத்தினை ஏற்றுக்கொள்ளுங்கள்.

தவறான செய்திகளைப்பரப்புவோர் குவைத் அரசாங்கத்தினால் விசாரிக்கப்படுவீர்கள்.

றிபாய் 
பஹாஹில் 
குவைத்

1 comment:

  1. குவைத்தில் இலங்கைப் பிரஜைகள் நோய் வாய்ப்பட்டவர்கள் கவணிக்க படுவது இல்லை என்று சொல்லப் படுவது உண்மை தானா?

    ReplyDelete

Powered by Blogger.