Header Ads



5 ஆயிரம் ரூபாயைப் பெற விகாரைக்கு, சென்றவர் திடீரென உயிரிழப்பு

5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை பெற்றுக் கொள்வதற்காக ஹோமாகமை ஹத்லஹகொட விகாரைக்கு சென்றிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை பெற்றுக்கொள்ள சென்றிருந்த 68 வயதான ஹோமாகமை மாகம்மான பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற எழுதுவிளைஞரான கருணாசிறி குணரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உதவி தொகை பெற்றுக்கொள்ள அவர், ஏதோ ஒரு சிரமத்திற்கு மத்தியில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தை பார்த்த ஒருவர், அவரை எதிரில் உள்ள ஆசனத்தில் அமர செய்துள்ளார்.

உடல் நிலைமை மோசமானதை அடுத்து 1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையினர் அந்த இடத்திற்கு வந்து சுகவீனமடைந்த நபரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.