தனிமைப்படுத்தல் முகாமில் பெண்ணுக்கு ஒரே பிரவசத்தில் 3 குழந்தைகள் - வீடியோவில் பார்வையிட்ட கணவர்
வெலிசர கடற்படை முகாமில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு ஓரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.
குறித்த பெண் கடற்டை சிப்பாயின் மனைவி என தெரிவிக்கப்படுகின்றது. தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தமையினால் தங்கள் குழந்தையை நேரில் பார்க்க முடியாத நிலைமை கணவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடியோ தொழில்நுட்பம் மூலம் குழந்தைகளை பார்வையிடும் சந்தர்ப்பத்தை கணவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment