Header Ads



மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கு கொரோனா


இலங்கையில் இன்றையதினம் ( 30.05.2020 ) 9 மணி வரையான காலப்பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 பேர் கடற்படையினர் எனவும் 3 பேர் மாலைதீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மொத்தமாக 1,566 கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 781 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 775  பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.