குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 313 பேருக்கு கொரோனா தொற்று
கடந்த 20 ஆம் திகதி குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 465 பேரில் 313 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று -28- மாலை உறுதி செய்யப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு தொற்று அதிகம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதன் காரணமாக சமூகத்தில் COVID-19 தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பம் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்நோய் சமூகத்தில் பரவும் அபாயம் 100 வீதம் தணியவில்லை என சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.

Post a Comment