14 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் கைத்தொலைபேசி பாவிப்பதை, தடை செய்யுமாறு முன்னணி பிக்குகள் கோரிக்கை
14 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி பாவிப்ப தனையைத் தடை செய்யுமாறு அல்லது கட்டுப் படுத்துமாறு முன்னணி பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைத்தொலைபேசிகளினால் எதிர்காலம் பாரிய ஆபத்துக்கள் எழக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக அரசுக்கு பிக்குகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அஸ்கிரிய பீட சிரேஷ்ட ஆலோசகர் வெந்துருவ உபாலி தேரர், மேதானந்த எல்லாவள தேரர், பிரான்ஸின் சங்க நாயக்கர் முருங்கா தஸ்யாய ஞானிஸ்வர தேரர், பிரித்தானியாவின் பிரதம விஹாராதிபதி கம்புறுராவல ரேவத தேரர், ஜேர்மனியின் பிரதம தேரர் ரத்மலே புஞ்ஞா ரத்ன, சுவிட்ஸர்லாந்தின் பிரதம தேரர் தேவி லங்கா சுதர்ஸ தேரர், வனராசி ராகுல தேரர் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு தேரர்கள் பலர் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கைத் தொலைபேசியை சிறுவர்கள் பாவிப்பதனால், பாரிய ஆபத்துக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களின் சிந்தனா சக்தி மாற்றப்பட்டிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேதானந்த எல்லாவள தேரர் தெரிவிக்கையில்,
மிக விரைவில் இது குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து கோரிக்கை ஒன்றை விடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
NAVAMANI


Excellent concern
ReplyDelete