Header Ads



மக்களை வெளியில் வராவிடாமல், கட்டுப்படுத்த பலே திட்டம்


இந்தோனேசியாவில் மக்களை வெளியில் வராவிடாமல் கட்டுப்படுத்துவதற்காக பலே திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு சமூக விலக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இந்தோனேசிய கிராமொன்று சமூகவிலக்கல் கட்டுப்பாடுகளை பேணுவதற்கான பேய்கள் போன்று வேடமிட்ட தொண்டர்களை பயன்படுத்துகின்றது.

மக்கள் வீடுகளில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஜாவா தீவின் கெபு கிராமத்தவர்கள் இந்த தந்திரோபாயத்தை பயன்படுத்துகின்றனர்.

பேய்களை போல வேடமிட்டவர்களை பயன்படுத்தும் தந்திரோபாயம் வெற்றியளிக்க ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ள கிராமத்தவர்கள் மக்கள் வீடுகளில் இருந்து வருவது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

பேய்கள் தோன்றிய பின்னர் பெற்றோரும் குழந்தைகளும் வீடுகளில் இருந்து வெளியேறுவதை குறைத்துக்கொண்டுள்ளனர் என கிராமத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் ஆபத்தை மக்கள் உணரச்செய்வதற்காக இந்த முயற்சி என உள்ளுர் மசூதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளுர் காவல்துறையினருடன் இணைந்து இளைஞர்கள் குழுவொன்று இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இந்த பேய்கள் குறிப்பிட்ட கிராமத்திற்குள் வருபவர்களை கண்காணிப்பதுடன் மக்கள் சமூக விலக்களை கடைப்பிடிப்பதை உறுதி செய்கின்றன.

No comments

Powered by Blogger.