Header Adsஜனாஸா விவகாரம் பற்றி நேற்று, இன்று, நாளை முத்தரப்புகளுடன் தொடர் பேச்சு


- அன்ஸிர் -

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும், முஸ்லிம் நிபணர் குழுவுக்கும் இன்று திங்கட்கிழமை 13 ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளது.

கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை, அடக்கம் செய்வது குறித்து வாதிடுவதற்காகவும், அதன் விஞ்ஞான ரீதியான ஆதாரங்களை முன்வைப்பதற்காகவும், இந்தப் பேச்சு நடந்துள்ளது.

இதில் முஸ்லிம் நிபுணர் குழு சார்பில் 2 சிங்கள பேராசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும்  இங்கிலாந்து நாடுகளில் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பல ஆதாரங்களை முஸ்லிம் தரப்பு நிபுணர் குழு, அடுக்கடுக்காக ஒன்றன்பின் ஒன்றாக சமர்ப்பித்துள்ளது. அந்த ஆதாரங்களை நிராகரிக்க முடியா நிலைகூட சுகாதார அமைச்சு சார்பில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.


நேற்று ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதியும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன், இதுபற்றி முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.

இதன் ஓரு கட்டமாகவே, இன்றைய பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது.

நாளை செவ்வாய்கிழமை 14 ஆம் திகதி மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை முக்கிய தரப்புகளுடன் நடைபெற உள்ளதாகவும் அறிய வருகிறது.

அதேவேளை நாளை பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டுமென பிரார்த்திக்குமாறு இந்த நிபுணர் குழுவின் தலைவர் றிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மனித உள்ளங்களை புரட்டக்கூடிவன் அந்த ஏக இரட்கன் அல்லாஹ்தான் என சுட்டிக்காட்டிய அவர், சிலவேளை நாளைகூட நல்ல முடிவு கிடைக்கலாம். எனவே நாம் எமது நம்பிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் கைவிடாமல் இருப்போம். 

பிரார்த்தனை ஒன்றே சகலவற்றுக்குமான திர்வு என முஸ்லிம்களாகிய நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஜனாஸா நல்லடக்க விவகாரத்திலும் நல்ல தீர்வு கிடைக்க பிரார்த்திப்போம் என்றார்.

அதேநேரம் கொரோனாவால் யாரேனும் மரணித்தால், அவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டுமென, நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி ஓரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


9 comments:

 1. Yaa Allah accept effort in this team with regard to Muslim's Janaza issue and make the final result favorable to us (your slaves) who obey you...

  ReplyDelete
 2. நாமும் துஆ செய்கிரோம்

  ReplyDelete
 3. Better not include any politicians in this technical committee

  ReplyDelete
 4. May Allah help Muslim scholars' effort to be success!

  ReplyDelete
 5. முஸ்லிமாக அடக்கம் செய்யப்படவேண்டும்.முஸ்லிமாக வாழவும்வேண்டும்

  ReplyDelete
 6. Submit also a suggestion stating that if Health Authorities fear Contamination of Waterbed, we can seal the Grave with Concrete ( A concrete box/ Steel Box with a lid bigger than the size of Coffin) and bury the body inside that box or enclosure.

  ReplyDelete
 7. MUSLIM ARASHIYALVAATHIKAL
  POI KOORI MUSLIMGALAI
  EMATTRUM EMAATRUKAARARKAL.

  ReplyDelete
 8. It is a very good initiative, yet this scientific concrete evidence could be presented in order to convince the authorities concerned are the pedologists who are the experts in soil sciences who could tell the fact that from over 4000 years ago it was established that burying of death bodies are the most safe and environmental protection strategies in stead of cremation which is more harmful and health hazard to the environment while the body is cremated the smoke oozes out to the air immediately turn into carbandioxide toxin gas in which there a lot of chances that the same or other harmful virus could immediately be emerged which is very much harmful to the neighbours or the surrounding of cremation point. It was very pathetic the air or environmental is polluted by human by sending out exhausted carbon monoxide, turning into toxin by way of billions vehicles and factories on earth which is evident over the city of Karachi in Pakistan and New Delhi in India where the sky over these cities turned into dark and smoke, non of these countries have dare to study the long term effects of these toxin for human being.Cremation is done very few parts of India and Sri Lanka alone and non of the western countries including Australia, New Zealand, USA do not cremate the death bodies as they know very well about the health hazard of this operation. Yet blindly or purposefully Sri Lanka does this environmental hazards!

  ReplyDelete
 9. எவராக இருந்தாலும் அரசியலோடு சம்பந்தப்பட்டவரகளை இக் குழுவில் இணைக்காது சுதந்திரமாகச் செயற்படப் பாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் வெற்றியைத் தருவான் என்ற நம்பிக்கையுடன் செயற்படுங்கள். இன்ஷா அல்லாஹ்ட வெற்றி கிடைக்கும்.

  ReplyDelete

Powered by Blogger.