யாரும் அச்சப்படக் கூடாது, பிண உறைகளை சுகாதார அமைச்சு கோருவது புதிய விடயமல்ல
“ பிண உறைகளை சுகாதார அமைச்சு கோருவது புதிய விடயம் அல்ல . கடந்தகால அனர்த்தங்களின்போது இவ்வாறு கோரப்பட்டன . உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்களிம்போதும் இப்படியான உறைகள் கோரப்பட்டன .
இதனை நினைத்து யாரும் அச்சப்படக் கூடாது.கொரோனா வைரஸால் இலங்கையில் அவ்வளவு உயிரிழப்புகள் நடக்கும் வாய்ப்பில்லை. உயிரிழப்புகளை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்.மிக உச்சபட்ச சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். சுகாதார பாதுகாப்பு மக்கள் கைகளிலும் உள்ளன.”
சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு.
sivarajah

Post a Comment