Header Ads



"விஜி" க்காக கண்ணீர் வடிக்கும் முஸ்லிம்கள்


யாழ்பாணம் வண்ணார்பேட்டை பண்ணையை சொந்த இடமாகவும் பிரான்ஸ் (பாரிஸ்) வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம் பிள்ளை விஜயன் (விசயப்பு) இன்று 12/4/2020 காலமானார். 

என்ற செய்தி கேட்டவுடன் விசயப்புவின் நினைவுகளின் அதிர்வலைகள் என்னுள் உயிர்த்தது. 

ஒரு சிலரே  மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள்,அதில் ஒருவர் இந்த சிதம்பரம் பிள்ளை விஜயன். 

1995 ம் ஆண்டில் இவரை சந்திப்பதற்கு சென்றேன். Belleville இல் பர்ஹான் அவர்களின் இல்லத்தில் இவர் தங்கியிருந்தார் .அங்கு வைத்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன் .

ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியவர்களை அந்த நாட்டின் சட்டம், மொழி ,தெரியாத காரணத்தால் அவர்களை சுரண்டி பிழைப்பவர்கள் மத்தியில் அகப்பட்டு பந்தாடப்பட்டவர்கள் 

இவரிடம் உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு இவர் ஒரு சதம் பணம் வாங்காமல் உதவி செய்து வருவதை கண்டுஇவர்மேல்எனக்குத் தனி மரியாதையே ஏற்பட்டது. 

பிரான்சில் முதல் காலடி வைத்ததும் பிரான்ஸ் மொழி தெரியாமல் அகதி விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாமல் தொழில் இன்றி , பணமின்றி
மொழி தெரியாத நாட்டில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தவிக்கும் உள்ளங்களை தைரியப்படுத்தி ஒரு சேவை மனப்பான்மையுடன் உதவிய நல்ல மனிதர் இந்த சிதம்பரம் பிள்ளை விஜயன். 

Belleville பர்ஹான் வீடு முஸ்லிம் சகோதரர்களின் குறைதீர்க்கும் இல்லமாக, செயல்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 

ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பு ஒன்றை வாடகையாய்க் கொடுத்து
எங்கள் நெஞ்சினில் வாழ்கிறாய்
என்று வேதனை படுகின்றனர். 

சிதம்பரம் பிள்ளை விஜயன் தான் வைத்தியசாலைக்கு செல்லும் முன் ஒரு முக்கிய கடிதத்தை போஸ்ட் பண்ணும் படி, பர்ஹான் அவர்களிடம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.

அந்த கடிதம் Tours என்ற இடத்தில் வசிக்கும் ஒரு  முஸ்லிம் குடும்பத்தின் நிரப்பப்பட விண்ணப்ப படிவமாகும்.   அதுதான் அவர் செய்த கடைசி உதவியாக அமைந்தது. அந்த கடைசி நேர கடமையை செய்துவிட்டு கண்மூடியதை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள் அந்த குடும்பத்தினர். அவர்கள் விசயப்புவை கண்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்றும் தெரியாது, தொலைபேசி மூலமே இவரிடம்  உதவி பெற்றவர்கள். 

அறிவு செல்வத்தை தானமாக வழங்கிய கொடைவள்ளல் இந்த சிதம்பரம் பிள்ளை விஜயன் என்ற சமூகசேகவன். 

இரண்டு நாளில் உயிர் பிரிந்து விடும் என்று டாக்டர்கள் அறிவித்தனர் .நான்கு நாட்கள் ஆகியும்  உயிர் பிரியாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவன் செய்த தர்மம்  இந்த பாடலை நினைவு படுத்தி சென்றது .

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது  வல்லவன் வகுத்ததடா. விஜி வருவதை எதிர் கொள்ளடா.

நண்பர் பர்ஹான் அவர்களை தொடர்பு கொண்டபோது மிகவும் வேதனையுடன் விசயப்புவின் செயற்கை சுவாசம் நிருத்தப்பட உயிர் பிரியும் நேரம் அருகில் இருந்ததை கூறினார். கடைசி வரையில் அவருடன் இருந்தேன். அவர் இருதிசடங்கை முன்னின்று நான் செய்து முடிப்பேன். அது எனக்கு கிடைக்கும்  பாக்கியம் என்றார். 

நட்பில் நனைந்த நிமிடங்கள்  நினைவில் நின்று  சென்றது அவர் ஆத்மா சாந்திக்காக எங்கள் துஆ பிரார்த்தனை. 

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன்.

1 comment:

  1. அவர் மரணிப்பதற்கு முன்னர் அவருக்கு ஹிதாயத் கிடைக்க துஆ செய்திருக்கலாம், முயற்சி செய்திருக்கலாம். மரணித்த பின்னர் துஆ செய்து என்ன பயன்? அது நபிமார்களின் பெற்றோராக இருந்தாலும் சரிதான். என்றாலும் அவரது குடும்பத்தினருக்கு இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்தனை புரிவது நன்று.

    ReplyDelete

Powered by Blogger.