Header Ads



பொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ

கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள், கொண்டு வந்தவுடன் பொதுத்தேர்தல் அடுத்த மாத்த்திற்குள் நடத்தப்படும், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தற்போதைய நிலைமையினை சாதகமாக கொண்டு பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட முயற்சிக்கின்றார்கள். இதற்கொரு போதும் இடமளிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சர்வ கட்சி கூட்டத்தில் எதிர்தரப்பு அரசியல் கட்சித்தலைவர்கள் இணக்கம் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் மக்கள்  மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான முரண்பாடான கருத்துகளை  குறிப்பிட்டுக் கொள்ளகின்றார்கள். பாராளுமன்றத்தை கூட்டுவதால் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியாது. கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மக்களின் விமர்சனங்களுக்கு  உள்ளானது இதன் காரணமாகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை விரைவாக கலைத்து மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு  செய்ய தீர்மானித்தார்.

பூகோள மட்டத்தில் தாக்கத்தை  ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இம்மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தலை பிற்போட வழிசெய்தது. தற்போதைய நிலைமையினை வெற்றிக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றது.

அடுத்த மாதத்திற்குள்  பொதுத்தேர்தலை நடத்தும் முயற்சிகளே அதிகம் உள்ளன என்றார். 

2 comments:

  1. you are more interested election than health of the People. Many countries postponed the election because they care health of the people.

    ReplyDelete
  2. Nee poi vote a podu, po....!!!

    ReplyDelete

Powered by Blogger.