அன்பான இஸ்லாமிய சொந்தங்களே, எமது உறவுகளுக்கு உதவ வாரீர்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொடூரமான விஷக்கிருமிகளின் வீரியத்தால் அன்றாடம் த்த்தமது சீவியத்தை கொண்டு செல்லும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிப்போனது யாவரும் அறிந்ததே!! இத்தகைய ஏழை எளியோர்களினது அடிப்படையான தேவைகளை ஓரளவு குறைப்பதற்காகவும் அவர்களது நோன்பு ஸஹர் ஏற்பாடுகளை இலகுவாக்கவும் எதிர்வரவிருக்கும் புனிதமிக்க ரமலானை முன்னிட்டு கணிசமானளவிலான நிவாரண உணவுப்பொதிகளை வழங்க JMA - Uk உத்தேசித்துள்ளோம்.
இவ்வாறான பெருவாரியான நிவாரணப்பணிகளை கொண்டுசெல்ல உங்களிடமிருந்து ஸக்காத், ஸதகா, மற்றும் நன்கொடைகளை பாரியளவில் எதிர்பார்த்து காத்து நிற்கின்றோம். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் நம் சகோதர, சகோதரிகள் குறைந்தளவு 5 பவுண்டுகள் வீதம் தலா ஒவ்வொருவரும் எமக்களித்து உதவ முன்வந்தால் இலங்கை நாட்டிலுள்ள ஆயிரமாயிரம் பட்டினியால் காலம் தள்ளிவரும் எத்தனையோ பச்சிளங்குழந்தைகளுக்கும், வயோதிபர்களுக்கும், பல்லாயிரம் விதவைகளுக்கும் இன்னும் சில வாரங்களில் எம்மை எதிர்கொள்ளவிருக்கும் சங்கையான ரமலானில் அவர்களது நோன்புகளை இலகுவாக பிடிக்க ஏதுவாக அமையும். மேலும் உங்களது ஸக்காத் பணங்களை முன்கூட்டியே எங்களிடம் ஒப்படைத்தால் அதற்குரியவர்களிடமும் உரிய நேரத்தில் ஒப்படைக்கவும் இலகுவாக அமையும்.
Bank Details: ENGLAND
Bank : Lloyds bank
Branch : Kentish Town
A/C No : 00980043
Sort Code : 30 - 94 - 66
Ref : “Coronavirus”
BIC: LOYDGB21484
IBAN: GB22 LOYD 3094 6600 9800 43
JMA UK Sri Lankan Bank Details:
M.M.M.KAIS
A/C NO: 047020004451
HATTON NATIONAL BANK
BIYAGAMA BRANCH
Contact Details:
E-mail: jmauk@ymail.com
Website: https://jaffnamuslimuk.org
Facebook: https://m.facebook.com/JaffnaMuslimAssociationUK/
எம்பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்,
والصدقة تطفىء الخطيئة
كما تطفىء الماء النار
"நீர், நெருப்பை அணைப்பது போல, கொடுக்கும் கரங்கள் பாவங்களை அழிக்கின்றன."(புஹாரி)
அன்பான நண்பர்களே..
பல்லாயிரம் உதவிகளை கேட்டு நம் சொந்தங்கள் எங்களிடம் தினமும் மடல் அனுப்புகின்றனர். அனைவர்களினது தேவைகளையும் நிறைவேற்றும் கையிருப்பு எம்மிடமில்லை. புனித ரமலானை முன்னிட்டே இத்தகைய கோரிக்கையை உங்கள் முன் வைத்துள்ளோம். நம் சகோதர்ர்களுக்கு குறைந்தளவு 5 பவுண்டுகளையோ / உங்களால் இயன்றளவு ஒரு தொகையினையோ மேல் குறிப்பிட்டுள்ள இங்கிலாந்து வங்கிக்கணக்கிற்கோ அல்லது இலங்கையிலுள்ள வங்கிக்கணக்கோ வைப்பிலிட்டு நம் இனபந்துகளின் அடிப்படை தேவைகளின் ஒரு பகுதியையாவது குறைப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!!!
யார் யாரெல்லாம் இத்தகைய புனித உதவித்திட்டத்தில் இணைந்து கொண்டார்களோ அவர்கள் அனைவர்களது செல்வங்களையும் விஸ்தீரணமாக்குவாயாக. அவர்களது குடும்பங்களையும் காத்தருள்வாயாக!
வஸ்ஸலாம்.
JMA - UK TEAM
Post a Comment