Header Ads



மக்களை கட்டுப்படுத்த வீதிகளில், சிங்கங்கள் விடப்பட்டுள்ளதா..?


ரஷ்யாவில் மக்களை கட்டுப்படுத்துவதற்காக வீதிகளில் சிங்கங்கள் விடப்பட்டுள்ளதாக, புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக மாறி வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும், தங்கள் மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம், இது மனிதர்களிடமிருந்து எளிதில் பரவக் கூடியது என்று அறிவுறுத்தி வருகிறது.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு சில நாடுகளில் மக்கள் சாதரணமாக ஒன்று கூடுவது, ஆட்டம் பாட்டம் என்று இருக்கின்றனர்.

தற்போது வரை உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 374,331-ஐ தொட்டுள்ளது. 16,347 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சமூகவலைத்தள பக்கத்தில், ரஷ்யாவில் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் நாடு முழுவதும் 800 சிங்கம் மற்றும் புலி போன்ற விலங்குகளைச் சாலைகளில் விட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை பல ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த புகைப்படத்தின் உண்மை குறித்து பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய சோதனையில், இது உண்மையில்லை, பொய் என்பது தெரியவந்துள்ளது. அது 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தென்னாப்ரிக்காவின் ஜோஹனஸ்பர்க் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

கொலம்பஸ் என்ற பெயர் கொண்ட அந்த சிங்கம், சினிமா படப்பிடிப்புக்காக படக்குழுவினரால் சாலைக்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.