Header Ads



பல்டியடித்த ரணில் - இனி களத்தில் சந்திப்போம் என்கிறார் மனோ

- Mano Ganesan -

ரணில் விக்கிரமசிங்க"கூட்டணியை கடாசி விட்டு வாருங்கள், மீண்டும், ஐ.தே.கட்சி என்றே போட்டி போடுவோம்", என்கிறார்.

கூட்டணி அமைத்து, அதற்கு சஜித்தை தலைவராக்க, ரஞ்சித்தை செயலாளராக்க, கூட்டாக போட்டியிட, கடந்த மாதமே ஐதேக செயற்குழு எடுத்து அறிவித்த முடிவுகளை நம்பி, கட்சி/கூட்டணி உடைய கூடாது என்ற நல்லெண்ணத்தில் செயற்பட்டால், சின்ன(ம்) என்ற பிரச்சினையை கிளப்பி, இன்று இந்த முடிவை ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஆக, ஐதேக செயற்குழுவின் தீர்மானங்களையே இடை நிறுத்தி, ரணில் தலைவர், அகிலவிராஜ் செயலாளர், ரவி கருணாநாயக்க பிரதி தலைவர், நவீன் திசாநாயக்க தேசிய அமைப்பாளர் என்ற அடிப்படைகளில் நாம் போட்டியிட வேண்டுமாம்.

இது ஆளும் அணியை சந்தோஷப்படுத்துகிறது. யார் எவருடன் "டீலில்" இருக்கிறார்கள் என தெரிகிறது.

இனி களத்தில்தான்...!

2 comments:

  1. "இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;

    ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது;

    ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான்.

    மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்."

    (அல்குர்ஆன் : 4:108)

    ReplyDelete
  2. பலமானது கட்ச்சியா தனி நபரா என்கிற கேழ்விக்கு கட்ச்சி அல்லது கட்ச்சியை முழுமையாகவோ உடைத்தோ கைபற்றும் தனிநபர் என்பதுதான் வரலாற்றின் பதிலாக உள்ளது. காலம் கடக்கமுன்னம் மனோ கணேசனும் முஸ்லிம் தலைவர்களும் நிலமையை உணர்ந்து கொள்வது சிறந்தது. ரணில சயித்தா யு.என்.பி என்கிறதை தீர்மானிப்பது முஸ்லிம்களதும் மலையக தமிழர்களதும் வேலையல்ல நண்பர்களே. உங்கள் இனத்தின் வெற்றியும் உங்கள் கட்ச்சியின் வெற்றியும் மட்டுமே உங்கள் இலட்ச்சியம் என்பதை இப்பவாவது நீங்க உணரவேண்டும். அல்லது அவலம்தான் மிஞ்சும்.

    ReplyDelete

Powered by Blogger.