Header Ads



சவுதி மன்னரின், ஆறுதல் கடிதம்


பல பலம் பொருந்திய நாடுகளில் அந்நாட்டு தலைவர்கள் இந்த கோரோனா வைரசு தொற்றை எதிர்த்து போராட முடியாமல் வலுவிழந்து என்ன பேசுவதென்று தெரியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், இன்னும் சில நாடுகளில் எங்களால் இதைக் கட்டுப்படுத் முடியவில்லை என்று அறிக்கை விடும் சூழ்நிலையில்...;

நேற்றைய தினம் சவுதி அரேபியா மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் : "நாட்டுமக்கள் மற்றும் சவுதியில் வசிக்கும் வெளிநாட்டு மக்களை சமத்துவக் கண்கொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களும் செய்து கொடுக்கப்படும்" என்று கூறியதோடு அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும், அரசு விடும் கட்டளைகள் வழிகாட்டல்களை சரியாக பேணி நடைமுறைப் படுத்திக் கொண்டு இருப்பதை முன்னிட்டு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் ஆறுதல் கூறும் முகமாக " (إن مع العسر يسرا) கஷ்டத்துடன் இலேசு உள்ளது நிச்சயம் நாம் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வோம்" என்று கூறியுள்ளார்.

தகவல் ; "அல்அரபிய்யா அஸ்ஸுஊதிய்யா"

https://twitter.com/AlArabiya_K…/status/1240702248146972673…

Ahsan Ibnu Asman Muhajiri

2 comments:

  1. 'உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

    அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன;

    “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு
    அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்;

    “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)'

    (அல்குர்ஆன் : 2:214)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. And the Saudi government is opposing the relaxing of Iran's economic sanctions at this hour of need for at least medical care supplies. This doesn't show their generosity or consideration for other people.

    ReplyDelete

Powered by Blogger.