Header Ads



அல் மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியா, புதிய கட்டிட திறப்பு விழா


அல் மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியா புதிய கட்டிட திறப்பு விழா நேற்று 08,03,2020 நடைபெற்றது. 

நிறுவனப்பணிப்பாளர்  அஷ்ஷேக் அப்துல் மலீக்  வரவேற்புரையில் அரம்பமானது, அதில் ஓலைக்குடிசையில் மலீக்மௌலவியின் தாயாரின் முயற்சியிடனாலும் தந்தையின் ஒத்துழைப்புடனும் பல சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கம்பெற்று இன்று இவ்வளர்ச்சி கண்டுள்ளதற்கு அல்லாஹ்வின் உதவிதான் என்ற நடந்தவிடயங்களை தெளிவுபடுத்தி ஆரம்பித்து வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

பின்னர் மதரஸா மாணவர்களின் பல்வேறுபட்ட மார்க்க நிகழ்ச்கிகளும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பின்னர் கௌரவ பிரதிநிதிகளான அப்துல் மஜீத் அகடமியின் பணிப்பாளர்  அஷ்சேக் அப்துல் நாஸர் மௌலவி மதரஸா மார்க்க குர்ஆன்கல்வியின் ஆரம்ப நபியின் கால வரலாற்றிலிருந்து இற்றை வரையிலான விடயங்களை தொகுத்துக்கூறினார்கள். 

அதன் பின்னர் நிதா பவுண்டேஷன் பணிப்பாளர் அஷ்சேக் ஹஸன் பரீத் பின்னூரி அவர்களினால் அல்லாஹ்வுக்காக உதவிசெய்வதன் முக்கியத்துவமும் அதன் பிரதிபலன்களும் எமக்கு காத்திருக்கும் வெகுமானங்களின் சிறப்புக்கள் பற்றி குர்ஆனில் வந்துள்ள விடயங்களை தெளிவுபடுத்திகூறினார்கள். 

புத்தள ஜம்இயாவின் தலைவர் அஷ்சேக் அப்துல்லாஹ் மௌலவியினால் இம்மதரஸா மார்க்கப்பணிக்காக மட்டுமல்ல இதனைச்சூழவுள்ள மக்களுக்கான பணிசெய்யும் நிறுவனமாக திகழும் எனவும் வாழ்த்துப்பணிப்புரை செய்தார்கள். பின்னர் பிரதம அதிதிகளும் கௌரவிக்கப்பட்டார்கள் இந்த நிகழ்வில் பல பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் ஜமாத்தார்கள், பலதரப்பட்ட பிரமுவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




No comments

Powered by Blogger.