Header Ads



ஊரடங்கு தளர்த்தப்படும் போது, சமூக இடைவெளியினை பின்பற்றுங்கள் - இராணுவத் தளபதி

ஊரடங்கு தளர்த்தப்படும் தருணங்களில் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்றவேண்டியது அவசியமாகின்றது என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்றையதினம் ஊரடங்கு ஆறு மணிநேரம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஒரு மீற்றருக்கும் அதிகமாக இடைவெளியை ஒருவரிடத்திலிருந்து பிறிதொருவர் பேணுவது அவசியமாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் எமக்கு வெளிப்படையாக தெரியாது விட்டாலும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் 
அடையாளப்படுத்தப்படாதிருப்பதானது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(ஆர்.ராம்)

No comments

Powered by Blogger.