Header Ads



எதிர்வரும் தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல் அல்ல, சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் தேர்தலாகும்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல் அல்ல அது எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேர்தலாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

உரிமைகள் இந்த அரசாங்கத்தில் எமக்கு மறுக்கப்படுகிறது. பள்ளிவாயல்,பர்தா ,திருமண சட்டங்கள் உள்ளிட்டவற்றை மழுங்கடிக்க நினைக்கிறார்கள்.

இதனை பாதுகாக்க நாம் சரியான தலைமைகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

இதனை வெற்றிகொள்ள எதிர்வரும் தேர்தலில் சமூகத்தின் உரிமைக்காக ஓங்கி ஒலிக்கின்ற குரலை நாடாளுமன்றிற்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஒருங்கினைப்புக் குழுவிலும் மாவட்ட உரிமைகளை வென்றெடுக்கவும் பொறுப்பு வாய்ந்த தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும். இன விகிதாசாரத்திற்கு ஏற்ப உள்ளூராட்சி மன்றங்களை தெரிவு செய்ய முடியாத நிலையும் தோன்றியுள்ளது.

சாய்ந்தமருதில் புதிய நகர சபை உருவாக்கம் பற்றி தங்கத்தட்டிலே வைத்து கொடுப்பது போன்று மூன்று நாட்களின் பின் இரத்துச் செய்து விட்டார்கள்.

இதனை நாம் இங்கு கை தட்டி,கை கட்டி விட்டு சென்று விட முடியாது சமூக உரிமைகளுக்காக குரல் கொடுக்க பாடுபட வேண்டும். எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 12.30 மணியுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் .

இளைஞர்கள்,பெண்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியதொரு கால கட்டம் மத அனுஷ்டானங்களை பாதுகாக்கவும், எமது மண்ணையும் பாதுகாக்க உரிமைக் குரலாக செயற்படுவோரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் .

இன்று அரச சேவையில் இலங்கை நிருவாக சேவை (SLAS), SLOS சேவை போன்ற அரச அதிகாரிகள் இருக்கின்ற போதிலும் இராணுவம்,கடற்படைகளை கொண்டு நேர்முகத் தேர்வு நடாத்துகிறார்கள்.

இது போன்று வவுனியா மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றிய ஹனீபா கொழும்புக்கு இடமாற்றம் செய்து விட்டார்கள் .திருகோணமலை,அம்பாறையில் 42 வீதமாக வாழும் எமது சமூகத்தினரிலிருந்தும் மாவட்ட செயலாளர்கள் உரிய விகிதாசாரத்தின் படி நியமனம் செய்யப்படாது உரிமைகள் மேலும் மறுக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நான் ஒரு பேச்சுக்கு சொல்றேங்க. மன்னிச்சுப் போடுங்க. தேர்தல் அண்மிச்சுப் போய்ட்டு என்றால் மக்களின் காதில் பூச்சுற்றலாம் என்ற நம்பிக்கையில் இப்பிடித்தான் அரசியல்வாதிங்க பேசுவாங்க. . சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவோம். அப்பிடி இப்பிடின்னு எவ்வளவோ இருக்குங்க. 1948 லிருந்து இது வரைகாலமும் என்ன உரிமைகளை எங்கட பாதராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத் தந்திருக்கின்றார்கள். இந்தப் பேச்சை எல்லாம் உட்டுப்போட்டு இதுவரை காலமும் நாங்கள் உரிமைகளை பெற என்ன செய்திருக்கோம். இனிமேல் என்ன செய்யப்போரம். இவற்றைச் சொல்லி வாக்குக் கேளுங்க. "மக்களின் படிப்பறிவின்மையை அபிவிருத்தி செய்வதே அரசியல்வாதிகளின் பெரும் மூலதனம்" என்ற பொன்மொழியை இத்தேர்தல் காலத்தில் முன்வைக்க விரும்புகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.