Header Adsஊரடங்குக்கு கட்டுப்பட, முஸ்லிம்களை வலியுறுத்துங்கள் - பொலிஸ் தலைமையகம் ACJU விடம் வேண்டுகோள்


- அன்ஸிர் - 

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்குடன், அரசாங்கத்தின் வழிநடத்தலில் பொலிஸ் ஊரடங்கு நாடு முழுவதும் அமுலில் உள்ளது.

இந்நிலையில் பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி மாலை பொலிஸ் அதிகாரிகளுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஊரடங்குச் சட்டத்தை முற்று முழுதாக கடைபிடிக்குமாறு, முஸ்லிம்களை அறிவுறுத்துமாறு பொலிஸ் தலைமையகம் ஜம்மியத்துல் உலமாவை கேட்டுக் கொண்டுள்ளது. 

இதற்காக பள்ளிவாசல்களை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் மேலும் சட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக இதுவரை சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்குச் சட்டத்தை முஸ்லிம்கள் மதிக்கிறார்கள் இல்லை, இதனால் ஒருதொகை முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும், விமர்சனங்களும் வெளியாகியுள்ள நிலையில் பொலிஸ் தலைமையகம் ஜம்மியத்துல் உலமாவை அழைத்து இந்த மேலதிக வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

 1. யா அல்லாஹ், முஸ்லிம் சமூகத்தை நாட்டின் சட்டத்தை மதித்து நடக்கக் கூடியவர்களாகவும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்களாகவும் ஆக்குவாயாக!
  வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரை சரியாக வழிநடத்தும் பொறுப்பை குறிப்பாக பெற்றோரும் ஆசிரியர்களும் சமூக,சமய நிறுவனங்களும் பள்ளிவாசல்களும் ஏற்று செயற்படுத்துவது இன்றியமையாதது.
  கொறனா புயல் ஓய்ந்து சாதாரண நிலை நிலவுகையில் ஏற்படும் சிறு கீறல்களின் போதும் இவ்விடயம் இனவாதிகளால் பெரிதாக தூக்கிப் பிடிக்கப்படும். அதற்கு இனவாத ஊடகங்களும் பக்கவாத்தியம் வாசிக்கும்.
  எனவே நாம் ஒவ்வொருவரும் தமது பிள்ளைகளில் கவனம் செலுத்துவோம்.

  ReplyDelete
 2. இலங்கை முஸ்லிம்கள் சகலரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் இஸ்லாமிய அமைப்பு ACJU என அழைககப்படும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஆகும். அதன் நிர்வாக உறுப்பினர்கள் இலங்கையின் புகழ்வாய்ந்த உலமாக்கள்மூலம் தேர்வுசெய்யப்பட்டவரகளாகும்.

  இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் சட்டங்களை மதிப்பது கிடையாது என்ற விடயம் இன்று நேற்று அல்ல பன்னெடும் காலமாக இங்கு நிலவி வரும் மிகவும் கெட்ட பழக்கம் என்பது எங்கள் அனைவருக்கும் கண்கூடாகத் தெரிந்த விடயம். அவசர காலங்களில் உரிய அரசவிதிமுறைகளைப் பின்பற்றாமை; ஊரடங்கு உத்தரவின்போது அவற்றைப் பினபற்றாமை; வாகனங்களுக்கு உரிய ஆண்டு வரிகளைக் கட்டாது ஏய்ப்பு செய்வது. மட்டுமன்றி அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் போன்ற பலவேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய சமூகமாக முஸ்லிம் சமூகம் இலங்கையில் காணப்படுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இந்த அவசர ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள இந்தக் காலத்தில் முஸ்லிம் பகுதிகளில் நுரற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட சம்பவங்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. உலகம் எங்கிலும் சகல மத பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. சமய அனுஸ்டானங்கள் அனைத்தும் வீடுகளிலேயே நடாத்தப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சம்மாங்கோட்டுப் பள்ளியில் வைத்து உலமாக்கள் தெளிவாக இந்தக் காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெளிவுறுத்தப்பட்டிருந்தும் விசேடமாக முஸ்லிம்கள் அதற்கு மதிப்புக் கொடுத்ததாக இல்லை. அதைவிடுத்து அரசும் இனவாத ஊடகங்களும் இல்லாத பொல்லாததை இட்டுக் கட்டுகின்றனர் என்று கூறுவதே அபத்தம். கவனமாக இருந்து கொள்ளுங்கள். நீங்கள் எல்லாம் பபாக்கள் அல்ல. பிட்டு பிட்டு வைப்பதற்கு.

  ReplyDelete

Powered by Blogger.