Header Ads



மட்டக்களப்பில் 25 சுயேச்சைக் குழுக்கள் - சுமனரதன தேரரும் போட்டி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சுயேச்சைக் குழுக்களும், 19 அரசியல் கட்சிகளுமாக 44 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் 25ஆந் திகதி நடைபெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் வியாழக்கிழமை 19.03.2020 நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட வேட்பு மனுத் தாக்கல்பற்றி விவரங்களை அவர் வெளியிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸ், விசேட அதிரடிப் படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய இறுதிநாள் வேட்பு மனுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான கலாமதி பத்மராஜா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டது.

அருண்மொழிவர்மன் வேற்கரதீசன் மாணிக்கம் தம்பி முத்து தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, மகேந்திரன் புவிதரன் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி, சோமசுந்தரம் கனேசமூர்த்தி தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டனி, தருமலிங்கம் கிருபாகரன் தலைமையிலான முன்னிலை சோசலிசக் கட்சி, பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, சாமித்தம்பி ஆசைத்தம்பி தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சோலமன் பெசில் சில்வஸ்டர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, அலிஸாஹிர் மௌலானா தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமீர்அலி சிஹாப்தீன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சத்தி, உசனார் முகமட் றபாய் தலைமையிலான மௌபிம ஜனதா பக்ஸ, செய்யித் முஹ்சின் பர்ஹான் சக்காப் மௌலானா தலைமையிலான ஜனநாயக ஐக்கிய முன்னணி, டெவோன் பிவால ஜெயகொடி தலைமையிலான அபே ஜனபல ஆகிய அரசியல் கட்சிகளும்,

வித்தியாவதி முரலிதரன், அப்துல் மஜீட் முஹமட் பிர்தௌஸ், ஜோன் நியூமன் ஸ்ரரக், அமித் கமகே, இலவத்தம்பி அப்துல்காதர், ஏ.எம். அஸ்மி, ஏம்.எச்.எம். ஜிப்ரி, பைக்கீர் முகைதீன் முகம்மது இர்சாத், முகம்மது முஸ்தபா முகம்மது றுகைல், அரசரெத்தினம் யுகேந்திரன், முகமட் அலி முகமட் அமீன், இஸ்மாயில் பதியுதீன், கமர்தீன் ஹாஜியார் அப்துல் வாஜித், அசனார் முகம்மது அஸ்மி, முஹமட் ஹசன் முஹமட் ஜிப்ரி, நடராசா விசோதரன், இறம்ழான் முஹமட் றுஸ்வின், மீராசாகிப் முகமட் ரிபாஸ், ஜலால்தீன் முகமட் றியாஸ், அம்பிடியே சுமனரதன தேரர், முகம்மது அபூபக்கர் நிசால்தீன் ஆகியோர் தலைமைகளிலான சுயேச்சைக் குழுக்களும் வேட்புக்களைத் தாக்கல் செய்துள்ளன. 

No comments

Powered by Blogger.