Header Ads



கொரோனா தொடர்பில், விழிப்பாக இருக்கவேண்டும் - நாமல்

கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் தொடர்ந்தும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் மாத்திரமன்றி ஏனைய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இலங்கை இந்த நோயில் விடுபடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.எனினும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய சந்தையில் இலங்கை தங்கியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த நோய் பரவலில் இருந்து மக்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸினால் தாக்கப்பட்ட சீன பெண் சுகமாகி நாடு திரும்பியுள்ள நிலையில் மூன்று பேர் இன்னும் கண்காணிப்பு அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. இப்பதான் தூங்கி எழும்பியுள்ளீர்கள்.
    லோடஸ் கோபுரத்தை மீண்டும் திறக்க ஏகப்பட்ட சீனர்களை இலங்கை க்கு வரும்வரைக்கும் கா த் திரு க் கி ரீ ர் கள், அவர்கள் வரும்போது கொறோனாவுடன்தான் வருவார்கள்.

    உலகில் பல நாடுகள் பல நாடுகளுடன் போக்குவரத்து க் களை தற்காலிகமாக நிருத்ியுள்ளது, குறிப்பாக இத்தாலி, தென்கொறியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, ஈரான், ஈராக், எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத்,போன்றன தொற்றுக்கு ஆலாகியதால் ஒருத்தருக்கு ஒருத்தர் பயண தடையை ஏற்படித்ியுள்ளனர்.

    பல விமான சேவைகள் தங்களது விமானங்களையும் விடுமுறை கொடுத்து விமான ஊழியர்கள் விமான நிலைய ஊழியர்கள் இப்படி பலருக்கும் சம்பளம் இல்லாத விடுமுறைகள் கட்டாயமாகவும் உலகில் வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பை இந்த கொறோனா வைரஸால் உலகம் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

    ஆக உலகமே எப்போதோ விழித்திருக்கும் நிலையில் இலங்கை மட்டும் இன்னமும் அதற்கான சிந்தனை இல்லாமல் சீனர்களை இன்னமும் வரவேற்கும் இப்படியாக நடந்து கொள்கிறார்கள்.

    ஜப்பானில் நடக்க இருந்த கால்பந்தாட்ட பிரபலமான போட்டி நிகழ்ச்சியும் குவைத்தில் நடக்கவிருந்த தேசிய தினக் கொண்டாட்டங்களும் இன்னும் பல உலகில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிகழ்வுகள் இந்த கொறோனாவால் காலதாமதமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.