Header Ads



இத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்

வத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் தனது இருப்பிடத்தை கைவிட்டுச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ள்ளது.

பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதி சகாக்கள் குறித்த இளைஞனின் வீடு அமைந்துள்ள பிரதேசத்திற்கு சென்று இளைஞனை தேடியுள்ளனர். இளைஞன் வீட்டை கைவிட்டு சென்றுள்ளதால், அவர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

இந்த இளைஞன் இத்தாலியில் தொழில் புரிந்து வருவதுடன் விடுமுறை இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில் வத்தளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து புர்கா தொடர்பில் சமூகத்தில் கடும் அச்சம் ஏற்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவசரகாலச் சட்டத்தின் கீழ் புர்கா அணிய தடைவிதிக்கப்பட்டது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர்  பெண்கள் புர்கா அணி ஆரம்பித்துள்ளனர்.

நபர்களை அடையாளம் காண முடிந்த இந்த புர்கா காரணமாக சமூக பாதுகாப்பு மேலும் ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும் புர்காவுக்கான எதிர்ப்பு சமூகத்தில் குறைந்துள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. That's why he is not updated with the current law affairs of Sri Lanka and behaved like a wild animal.

    ReplyDelete

Powered by Blogger.