Header Ads



ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து, மைத்திரிபால விடுபட முடியாது, மஹேஸ் சேனாநாயக்க

கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய பொறுப்பில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சிறிசேன விடுபட முடியாது என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்திர ஆகியோர் மீது சுமத்தி விட்டு, அந்த பொறுப்பில் இருந்து முன்னாள் ஜனாதிபதி தப்பிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடந்த போது மஹேஸ் சேனாநாயக்கவே இராணுவ தளபதியாக பதவி வகித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் கடமையாற்றினார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன நிபந்தனைகளுடன் இன்று 5 பிணையில் விடுதலை செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.