Header Ads



எதிர்க்கட்சி வஞ்சம் செய்து, மக்களின் கைகளில் பணத்தை கொடுப்பதை தடுத்துள்ளது, மகிந்த

அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள சந்தர்ப்பத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் இந்த குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி மலைநாட்டு சங்கம் மண்டபத்தில் இன்று -21- நடைபெற்ற கிராம சேவகர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த வருடத்தின் கடன் செலுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. புது வருடத்தில் மக்களின் கைகளில் பணத்தை கொடுக்க நடவடிக்கை எடுத்த போது எதிர்க்கட்சி அதனை தடுத்துள்ளது.

எதிர்க்கட்சியில் இருந்து அரசியல் அணியை விட அனுபவமுள்ள அரசியல் அணி ஆளும் கட்சியில் இருக்கின்றது. எதிர்க்கட்சி தோற்கடிக்கும் என்பதை அறிந்து நாங்கள் அரச அதிகாரிகளுக்காக தயாரித்த சட்டமூலத்தை நாங்கள் சமர்பிக்கவில்லை.

எதிர்க்கட்சியின் வஞ்சகம் காரணமாகவே புத்தாண்டில் பாற்சோறு சாப்பிட்டு புதிய ஆடையை அணிய மக்களுக்கு இருந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனது.

எதிர்க்கட்சி என்பது அனைத்தையும் எதிர்ப்பதல்ல. மக்களுக்கு ஒரு சேவை நடக்குமாயின் அதற்கு எதிர்க்கட்சியின் ஆதரவு அதற்கு தேவை.

நான்கு மாத காலத்தை கடந்த அரசாங்கமே முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பத்தை வழங்குவதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாக இருந்தது. எனினும் பலர் இதனை விரும்பவில்லை.

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற பின்னர் ஒரு லட்சம் வீடுகளை நிர்மாணிக்கவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவும் முடிந்துள்ளது. சமூர்த்தி உதவியை பெற்று வாழவே சிலர் இன்னும் விரும்புகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.