Header Ads



மருதமுனையைச் சேர்ந்த மீராமுகைதீன் அஸ்ரப், பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு

(எம்.எம்.ஜபீர்)

மருதமுனையைச் சேர்ந்த சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மீராமுகைதீன் அஸ்ரப் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மீராமுகைதீன் அஸ்ரப் 1990ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்டு 2007ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் பல போட்டி பரீட்சைகளில் சித்தியடைந்து பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வுபெற்று பொலிஸ் திணைக்களத்திற்கு அர்பணிப்புடன் திறமையான சேவையாற்றியமைக்கு பொலிஸ் திணைக்களத்தினால் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வுபெற்று மருதமுனை மண்ணுக்கு பெருமைசேர்த்துள்ளார்.

மஸ்கலியா, சிவனொளிபாத மலை நல்லதண்ணிமலை, ஹட்டன், நுவரெலியா, பதுளை, அம்பாரை, சம்மாந்துறை, கல்முனை ஆகிய பொலிஸ் நிலையங்களில் சிறு குற்ற பிரிவு, பெரும் குற்ற பிரிவு, விளையாட்டுப் பிரிவு போன்றவற்றுக்கு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியதுடன்  ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பொலிஸ் காவன் பொறுப்பதிகாரியாகவும் சேவையாற்றியதுடன் தற்போது சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு  பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவருகின்றார்.

இவர் தனது ஆரம்ப  கல்வியை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும் உயர் கல்வியினை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிலும் கற்றுள்ளார். மேலும் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை உருவாக்கி அதற்கு பெயர் சூட்டியதுடன் கழகத்தின் வளர்ச்சிக்காக அர்பணிப்புடன் செயற்பட்டு பல உதைப்பந்தாட்ட போட்டிகளில் தனது திறமைகளை வெளிக்காட்டியமை குறிப்பிட்டத்தக்கது.

இவர் மர்ஹூம்களான ஏ.எல்.மீராமுகைதீன் மற்றும் எம்.ஐ.ஆயிஷா பீ.பீ ஆகியோர்களின் ஆறாவது புதல்வருமாவர்.

No comments

Powered by Blogger.