Header Ads



கத்தாரில் அமெரிக்கா தலிபான் அமைதி ஒப்பந்தம், 14 மாதங்களில் அமெரிக்கா படைகளை விலக்க முடிவு

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அங்கு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. 

இந்த பேச்சுவார்த்தையின் மூலம் வரும் 29-ம் தேதி அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கவும், தலிபான் பயங்கரவாத அமைப்பும் அமைதி ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, ஒரு வார காலம் சண்டை நிறுத்தம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆப்கானில் தலிபான் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. இந்த நிகழ்வில் இந்தியா சார்பில் கத்தாரிலுள்ள இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. பயங்கர வாதியுடன் ஓப்பந்தம் செய்பவனும் பயங்கரவாதிதான் என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்ட தவறியுள்ளார்.

    ReplyDelete
  2. தலிபான் பயங்கரவாத அமைப்பு இல்லை ஒரு தற்காப்பு அமைப்பு என்பதை கட்டுரை ஆசிரியர் விளங்கிக் கொள்ளவும்.

    ReplyDelete

Powered by Blogger.