Header Ads



கொரோனாவுக்கு தடுப்பூசி, கண்டு பிடிப்போருக்கு அன்பளிப்பு

கொரோனா வைரஸை கடுப்படுத்துவதற்கான தடுப்பூசியை உருவாக்கும் நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒரு மில்லியன் யுவானை (140,000 அமெரிக்க டொலர்கள்) அன்பளிப்பாக வழங்குவதாக பிரபல்ய சினிமா நட்சத்திரமான ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியம், இந்த விடயத்தில் என்னைப் போன்ற பலருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

வைரஸை கட்டுப்படுத்த விரைவில் ஒரு மாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். 

எந்த தனிநபரோ அல்லது அமைப்போ மருந்தை உருவாக்கினாலும், அவர்களுக்கு 1 மில்லியன் அன்பளிப்பாக வழங்கி நன்றி கூற விரும்புகிறேன்.

எனது இந்த அறிவிப்பானது பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதைப் பார்க்க தான் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹானில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸானது 28 நாடுகளில் பரவி 37,594 பேரை பாதிப்படைய செய்துள்ளதுடன் 814 பேரின் உயிரழப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை சீனாவின் சுகாதார அமைச்சகமானது கொரோன வைரஸிற்கு நோவல் கொரோனா வைரஸ் நிமோனியா (Novel Coronavirus Pneumonia) என பெயரிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.