Header Ads



திருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை

காத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவிலும்,உறுதி எழுதியும் பதிவு செய்து திருமணம் முடித்ததன் மூலம் இதுவரை நானறிந்த வரை எவருமே வழங்கிடாத மணமகளின் திருமணக் கொடை (மஹர்) என்று கூறலாம்.

இது இம்மாதம் எமதூரில் நிகழ்ந்துள்ளது.

தற்போது சமூகத்தில் சாதாரண நடுத்தர இளைஞர்கள் மஹர் தொகையை நகைகளை,பணத்தொகை என்பவற்றை வழங்கி திருமணம் முடிக்கின்றனர்.

ஆயினும் தான் சம்பாதித்து கொள்வனவு செய்த வீட்டையே மஹராக உறுதியும் எழுதிக்கொடுத்து திருமணம் முடித்த விடயம் நான்றிந்த வரை இதுவே முதலாவதாகும்.

இத்திருமணத்தைப் பதிவுசெய்த விவாகப்பதிவாளர் U.L.M.Jabeer.jp அவர்களும்  தனது 25 வருட பதிவாளர் அனுபவத்தில் 4600க்கு மேற்பட்ட பதிவுகளில் மஹராக வீட்டைப் மணமகன் மணமுவந்து கொடுத்து திருமணம் செய்தமை இதுவே முதற்தடவையாகும் என தெரிவித்தார்.

இது விடயமாக அறிந்தவுடன் மணமகனைக் கண்டு விடயத்தை உறுதிசெய்த பின் அவருக்கான என் ஆத்மார்த்த பிராரத்தனைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டேன்.

இதில் பிரதானமாக நாம் கவனிக்க வேண்டய விடயங்கள்:

1.வறுமையான குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பைக் கொண்டு வாங்கிய வீட்டை மீளப்பெற முடியாத அன்பளிப்பாக கொடுத்து ஒரு ஏழையை சுதந்திரமாக வாழ்வதற்கான துணையை பெற்றுக்கொண்டமை.

2.இவர் தனது துணையை மார்க்கம் ஒன்றையே முதன்மை படுத்தி தேர்வு செய்தமை.

3.இவர் முறையாகப் பேசியே இத்திருமண துணையைப் பெற்றுக்கொண்டமை.

4.மஹராக கொடுத்தால் அதில் தனக்கு உரிமையில்லை எனத் தெரிந்தும் தேர்ந்தெடுத்த மணமகள் மீது அதீத நம்பிக்கை கொண்டு மணவாழ்வை ஆரம்பித்தமை.

இம்மணமக்கள்  எதிர்காலத்தில் இறையருளுடன் நிம்மதியும், நற்பேறுகளும் பெற்று நிறைவுடன் நீடு வாழ அல்லாஹ் அருள் புரிவானாக!

- Jaufar Ali -

15 comments:

  1. Hehe...dowry is rampant in the East compared to other areas of the country. A pious woman will ask for a small Mahar as per hadeeth.

    ReplyDelete
  2. Mr. Gouse you might have a lack of knowledge..

    ReplyDelete
  3. Mr. Ghouse... stop your negative mentality... support the good change that is happening among the people.

    ReplyDelete
  4. சேலை கட்டிய மாந்தரை நம்பினோர் கைவிடப்படுவார்.

    ReplyDelete
  5. Great Work... May Allah Bless their family life and all.... Good Lesson for Shameful Easter people... Great..

    ReplyDelete
  6. May Allah bless the new couple.
    But Islamic way is, the bride should ask whatever she want, simple as that. So amount or value is not a matter. You give whatever bride ask.

    ReplyDelete
  7. சேலை கட்டிய மாதர்களல்ல விசுவாசமில்லாத ஆண்களை நம்பியோர்தான் பலவழிகளிலும் கிராமம் கிராமமாக பரிதவிக்கின்றார்கள்.

    ReplyDelete
  8. கிழக்கு முஸ்லிம்களுக்கு சிறந்த முன்மாதிரியை காண்பித்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

    சீதனம் என்ற பெயரில் மனைவியின் வீட்டையும் அவளின் பெற்றோர், சகோதரரின் உழைப்பில் உண்டான சொத்துக்களையும் அனுபவித்து சுக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சீதனத்துக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்கு செருப்படி கொடுத்திருக்கிறார்.

    ReplyDelete
  9. Great work...
    May Allah bless them for their success, joy and happiness..
    Easterners should take some lesson from him...

    ReplyDelete
  10. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீ தனத்துக்கு பெயர்போன கிழக்கு மாகாணத்தில் நபிவழியில் கணிசமான தொகை மஹர் கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த உங்களுக்கு அல்லா ரஹ்மத் செய்யட்டும் பாரகல்லாஹு லக அபார கலைக்க வஜமஅ பைனகுமா பி கேர்

    ReplyDelete
  11. கிழக்கிலே இது புதுமை பெண் வீட்டாரிடம் முழுமையான புது வீட்டை வாங்கி கொண்டு கலியாணம் முடிக்கும் ஆண்கள் மத்தியில் இது முன் மாதிரிதான் ; புகுந்த வீட்டு மாப்பிள்ளைகளை இனியும் காணக்கூடாது ..............புகுந்த வீடு ; பெண்களுக்கு தான் ஆணுக்கு அல்ல என்று நிரூபித்த புது மாப்பிளைக்கு வாழ்த்துக்கள் .... வீடு கேட்கும் கலாசாரம் கிழக்கிலும் கொழும்பிலும் இருப்பதாக கேள்வி

    ReplyDelete
  12. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் -

    அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

    (அல்குர்ஆன் : 4:4)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.