Header Ads



சிறு­பான்மை கட்­சிகளின் இன­வாதம் பயங்­க­ர­வா­தத்­தி­லேயே முடியும் அதை தடுக்க 22,23 யோசனைகள்

(ரொபட்  அன்­டனி)

பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில்  5 ஆச­னங்­களைப்பெறும்  சிறிய கட்­சிகள்  100 ஆச­னங்­களைப் பெறும் பிர­தான கட்­சி­களை அச்­சு­றுத்தி  தமக்கு தேவை­யான  அமைச்­சுக்­களை பெற்­றுக்­கொண்டு   ஆட்­சி­ய­மைக்க உத­வு­கின்­றன. இதனால் 100 ஆச­னங்­களை பெறும்  பிர­தான கட்­சிகள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. 

இது இன­வா­தத்­தையே ஊக்­கு­விக்கும்.  இத­னா­லேயே அர­சி­ய­ல­மைப்பின் 21 மற்றும் 22 ஆவது திருத்த யோச­னை­களை தனி­நபர் பிரே­ர­ணை­யாக கொண்­டு­வந்­துள்ளேன் என்று  ஆளும் கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ  தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ  முன்­வைத்­துள்ள அர­சி­ய­ல­மைப்பின் 21 மற்றும்  22 ஆம் திருத்த யோச­னைகள்  வர்த்­த­மா­னியில் வெளியி­டப்­பட்­டுள்ள நிலையில் இந்த தனி­நபர் பிரே­ர­ணைகள் தொடர்பில்  விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ கேச­ரிக்கு தகவல் தரு­கை­யி­லேயே  இவற்றை குறிப்­பிட்டார்.

நான் மூன்று மாதங்­க­ளுக்கு முன்­னரே அர­சி­ய­ல­மைப்பின்  21 , 22 ஆம் திருத்த யோச­னை­களை   தனி­நபர் பிரே­ர­ணை­க­ளாக  பாரா­ளு­மன்­றத்தில்  சமர்ப்­பித்­து­விட்டேன்.  21 ஆம்  திருத்­த­யோ­ச­னை­யா­னது  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட  மக்கள் பிர­தி­நி­திகள் தெரிவு தொடர்­பாக அமைந்­தி­ருக்­கின்­றது.

இந்த நாட்டில் 1988 ஆம் ஆண்டு வரை  மக்கள் பிர­தி­நிதி ஒருவர் தேர்­தலில் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்­டு­மாயின்  அவர் சார்ந்த கட்சி  குறித்த மாவட்­டத்தில்  12.5 வீத­மான வாக்­கு­களை  பெற­வேண்­டி­யது அவ­சி­ய­மாக இருந்­தது.  ஒரு கட்சி  ஒரு தேர்தல்  மாவட்­ட­மொன்­றில 12.5 வீத­மான வாக்­கு­களைப் பெறும் பட்­சத்­தி­லேயே  தமக்கு  ஒரு பிர­தி­நி­தியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஒரு தகு­தியைப் பெறு­கி­றது.

ஆனால் 1988 ஆம் ஆண்டு  அப்­போ­தைய பிர­தமர் ரண­சிங்க பிரே­ம­தாச இந்த சட்­டத்தை மாற்றி 5 வீத வாக்­கு­களைப் பெற்­றாலே ஒரு கட்சி  பிர­தி­நி­தியைப் பெறு­வ­தற்­கான   தகு­தியைப்  பெற்­று­விடும் வகையில்  ஒரு  ஏற்­பாட்டை கொண்­டு­வந்தார். 1988 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்லிம்  காங்­கி­ரஸின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக  அக்­கட்சி  முன்­வைத்த கோரிக்­கையை ஏற்று ரண­சிங்க பிர­மே­தாச இந்த  சட்­டத்தை மாற்­றி­ய­மைத்தார்.  

1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்­றது. இந்த சட்­ட­மா­னது 17 ஆம்­தி­கதி அதா­வது இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் திருத்­தப்­பட்­டது.

இந்த திருத்தம் கார­ண­மாக அதன்­பின்னர்  எந்­த­வொரு  பிர­தான கட்­சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடி­யாத நிலை­மையே காணப்­பட்­டது. ஆறு அல்­லத  ஏழு ஆச­னங்­களை தேர்­தல்­களில் பெற்­றுக்­கொள்ளும்  சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சிகள்  ஆட்­சியை தீர்­மா­னிக்கும் நிலையை அடைந்­தன.  

ஐந்து ஆச­னங்­களை வைத்து கொண்டு 100 ஆச­னங்­களை பெற்ற கட்­சிக்கு சவால் விடும் நிலைமை காணப்­பட்­டது. தமக்கு தேவை­யான அமைச்­சுக்­களை  கேட்டு பெற்­றுக்­கொண்­டனர். அது மட்­டு­மன்றி தேசிய கட்­சி­களில் சிறு­பான்மை மக்கள்  உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.  ஒரு காலத்தில்  பிர­தான கட்­சி­களில் சிறு­பான்மை கட்­சிகள் உயர்ந்த பத­வி­களில் இருந்­தனர். ஆனால்   தற்­போது அந்த நிலைமை இல்லை. இறு­தி­யாக கபீர் கசீம்  மட்­டுமே அவ்­வா­றான  ஒரு தலை­வ­ராக இருக்­கிறார். அவர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தவி­சாளர் நிலைக்கு சென்­றவர் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது.

கேள்வி: இதனால்  சிறு­பான்மை கட்­சி­களின்  பிர­தி­நி­தித்­து­வங்கள் பாதிக்­கப்­ப­டுமே?

பதில்: அவ்­வாறு நடக்­காது.  காரணம் எந்­த­வொரு சிறு­பான்மை கட்­சியும்  தற்­போது பாரா­ளு­மன்ற  தேர்­தல்­களில் தனித்­துப்­போட்­டி­யி­டு­வ­தில்லை. மாறாக  ஏதா­வது ஒரு  பிர­தான கட்­சி­யுடன்  ஒட்­டிக்­கொண்டே போட்­டி­யி­டு­கின்­றன.  அப்­போது அவர்­க­ளுக்கு தேவை­யான ஆச­னங்­களைப் பெற்­றுக்­கொள்­கின்­றனர்.  மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு மட்டும் இந்த சிக்கல் ஏற்­ப­டலாம்.  இவ்­வாறு சிறு­பான்மை கட்­சிகள்  இன­வா­த­மாக செயற்­பட முடி­யாது.  இன­வாதம் இறு­தியில் பயங்­க­ர­வா­தத்­தி­லேயே  சென்று முடியும். எனவே  அதற்கு  இட­ம­ளிக்க  முடி­யாது.  

இதே­வேளை அர­சி­ய­ல­மைப்பில் 22ஆவது திருத்­த­யோ­ச­னை­யையும் நான் சமர்ப்­பித்­தி­ருக்­கிறேன் அதில்  உயர் நீதி­மன்றம்  மற்றும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற  நீதி­ய­சர்­களை ஜனா­தி­ப­தியே நிய­மிக்­க­வேண்டும் என்றும்  அந்த நிய­ம­னத்­தின்­போது நீதி சேவை  ஆணைக்­கு­ழுவின்  ஆலோ­ச­னையைப் பெற முடியும் என்று   ஏற்­பாடு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.  அத்­துடன் சட்­டமா அதிபர்  பொலிஸ்மா அதிபர் கணக்­காளர் நாயகம்  மற்றும்  பாரா­ளு­மன்ற பொது செய­லாளர் ஆகி­யோரை  ஜனா­தி­ப­தியே நிய­மிக்­க­வேண்டும் என்றும்   அதன்­போது   பிர­தமர் மற்றும் பொதுச்­சேவை ஆணைக்­கு­ழுவின் ஆலோ­ச­னையைப் பெற முடியும் என்றும் ஏற்­பாடு  கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

காரணம் தற்­போது 19 ஆவது திருத்த சட்­டத்தின்  பிர­காரம் உயர்­நீ­தி­மன்ற  மற்றம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள்,  பொலிஸ்மா அதிபர், சட்­டமா அதிபர், கணக்­காய்­வா­ளர்­நா­யகம்,  மற்றும்  பாரா­ளு­மன்ற பொது­செ­ய­லாளர் நாயகம்  ஆகியோர்  அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யி­னா­லேயே நிய­மிக்­கப்­ப­டு­கி்­ன­றனர்.  

அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில்  அர­சி­யல்­வா­தி­களே இடம்­பெ­று­கின்­றனர். சில அர­ச­சார்­பற்ற பிர­தி­நி­தி­களும் இடம்­பெ­று­கின்­றனர். இவர்கள் அனை­வரும்   அர­சியல் நோக்­கத்தை அடிப்­ப­டை­யாக கொண்டே நிய­ம­னங்­களை செய்­கின்­றனர்.  இது  நாட்­டுக்கு நல்­ல­தல்ல.  இந்த நிய­ம­னங்கள் ஜனா­தி­ப­தி­யினால் செய்­யப்­ப­ட­வேண்டும்.

 உயர்­நீ­தி­மன்ற மற்றும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ய­சர்­களை நிய­மிக்கும் போது  ஜனா­தி­பதி  நீதி­சேவை ஆணைக்­கு­ழுவின் ஆலோ­ச­னையைப் பெற முடியும்.  காரணம் நீதி­யர்­சர்கள் தொடர்­பாக அனைத்து விட­யங்­களும் நீதி சேவை ஆணைக்­கு­ழு­வி­டமே உள்­ளன. அதே­போன்று பிர­தமர் மற்றம் பொது சேவை ஆணைக்­கு­ழுவின் ஆலோ­ச­னையைப் பெற்று   சட்­டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்­காய்­வா­ளர்­நா­யகம்  மற்றும் பாரா­ளு­மன்ற  பொது­செ­ய­லாளர்  ஆகி­யோ­ரையும்  ஜனா­தி­ப­தியே நிய­மிக்­க­வேண்டும்.

 அது­மட்­டு­மன்றி நாட்டின்   பாது­காப்­புக்கு  பொறுப்­பாக   ஜனா­தி­ப­தியே அர­சி­ய­ல­மைப்பு பிரகாரம் இருக்கின்றார்.  அவரே முப்படைகளின்  தளபதியாகவும் இருக்கின்றார்.  எனவே  ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சை  வைத்திருக்க வேண்டும். அதற்கு இரண்டு அமைச்சர்கள் இருக்க முடியாது.  இந்த விடயமும்  22 ஆவது திருத்த யோசனையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி: அப்படியானால் அரசியலமைப்பு பேரவையின் எதிர்காலம்?

பதில்: அரசியலமைப்பு  பேரவை இல்லாது போவதே நல்லது  என்றே தோன்றுகிறது. ஆனால்  சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு  அரசியலமைப்பு பேரவை இருக்கலாம்.

கேள்வி: 19 ஆவது திருத்த சட்டத்திற்கு  என்ன நடக்கும்?

பதில்: 19 ஆவத திருத்த சட்டத்தில் சில நல்ல விடயங்கள் உள்ளன. தகவலறியும் சட்டமூலம் போன்றவை சிறந்தவையாகும்.  

4 comments:

  1. He´s waste racist person then any others in Sri lanka.

    ReplyDelete
  2. இந்தத் தீர்மானத்தில் சிறுபான்மையினருக்கு நன்மையும் உண்டு. உடைந்து உடைந்து கட்சியமைத்தால் பிரதிநிதிகளைப்பெற முடியாமல் போகுமிடத்து கூட்டுச் சேர்ந்து போகவேண்டிய கட்டாயம் ஏற்படும். மட்டுமன்றி உடைந்து சென்று ஆளுக்கொரு கட்சி அமைக்கும் அசிங்கமும் தொலையும். தேசியக்கட்சிகளோடு தனிப்பிரிவாக இயங்குவதுடன் தமது கோரிக்கைகளை வென்றெடுக்கலாம். ஆளுக்காள் இனவாதம் பேசி வாக்குச் சேகரிக்கும் நிலை ஏற்படாது. இது மிகவும் ஆபத்தான விளையாட்டாகும். இஸ்லாமிய வரலாற்றில் உதைய்பியா உடன்படிக்கையும் இவ்வாறான சாதகமான விளைவையே முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

    ReplyDelete
  3. பாராளுமன்ற தேர்தல் மாகாணசபை தேர்தல் இரண்டும் தொகுதிவாரி முறையில் நடாத்தவேண்டும், விகிதாதர பிரதிநிதித்துவ முறை முற்றாக நீக்கப்படல் வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.