அதியுச்ச பாதுகாப்பில் இலங்கையில் நடந்த, மாலைதீவு அமைச்சரவைக் கூட்டம்
மாலைதீவு அரசின் இவ்வருட முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த முதலாம் திகதி இலங்கையில் நடைபெற்றது என்று சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.
அந்நாட்டின் அமைச்சரவை உறுப்பினர்கள் 20 பேர் ( 7 பெண் அமைச்சர்கள் உட்பட )இலங்கைக்கு ஓய்வுக்காக வந்து அஹுங்கல்ல பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
அப்போதே அமைச்சரவை கூட்டத்தையும் இங்கு நடத்த தீர்மானித்த மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹம்மட் சோஹ்லி ,முதலாம் திகதி அதனை நடத்தினார்.
அந்த ஹோட்டலுக்கு அதியுச்ச பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
Sivarajah Ramasamy

They could have kept it at Modis residence in India.
ReplyDelete