ARM ஜிப்ரியின் ஜனாஸாவைப் படமெடுக்கவோ, பதிவேற்றவே, பரப்பவோ வேண்டாம்
"வேண்டுகோள்"
மறைந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஜனாஸாவைப் படமெடுத்துப் படமாகவும் குரல் வடிவத்துக்கான கருத்துப் படமாகவும் சிலர் பதிவிட்டிருப்பது கண்டு வேதனைப்படுகிறேன்.
இவ்வாறு ஜனாஸாவின் படத்தை எதற்காகப் பதிவிட வேண்டும்..?
காலமெல்லாம் அது பொது வெளியில் சுழன்று வர அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் பார்த்துப் பார்த்து அழ வேண்டும் என்றா விரும்புகிறார்கள்?
அன்பின் நண்பர்களே, சகோதர சகோதரிகளே.. இந்தப் படங்களைப் பதிவிட்டவர்களை அவற்றை அகற்றக் கோருமாறு கேட்கிறேன்.
Ashroff Shihabdeen

Apidi ondrum illai . Awarin janasa paak mudiyathawarukku paarkum vaaiypu kittum allavaaa? Eppodum edirmaraiyaaga sindikka wendaam.
ReplyDeleteநபியவர்கள் பகிரங்கமான ஜனாஸா அறிவித்தல்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்கள்.அவ்வாறு செய்வதினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்னும் கவலை கொள்வார்கள். இவ்வாறான போட்டோக்களை பதிவேற்றுவது கண்டிக்கத்தக்கதாகும்.சில மடையர்களின் செயல்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் என்றும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
ReplyDelete