Header Ads



உலகில் பலம்வாய்ந்த 4 நாடுகளின் பிரதிநிதிகள் ஒரேநாளில் இலங்கைக்கு ஜனாதிபதி தெரிவித்தவை

உலகில் பலம்வாய்ந்த 4 நாடுகளின் பிரதிநிதிகள் ஒரேநாளில் இலங்கைக்கு  ஜனாதிபதி தெரிவித்தit t உலகில் பலம்வாய்ந்த நான்கு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கடந்த 24மணி நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை ஒரு அரிய அரசியல் நிகழ்வாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வேன்ங் ஈ, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் மற்றும் ஜப்பான் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ ஆகியோர் இன்று பிற்பகல் வரை இலங்கையில் தங்கியிருந்தனர்.

வீழ்ச்சியுற்றிருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது தனது பதவிக் காலத்தினுள் எதிர்பார்க்கும் முக்கிய விடயமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய பிரதிநிதிகள், இலங்கை ஆரம்பித்துள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.

அச்சத்திற்குள்ளாகியிருந்த சமூக மற்றும் மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதை அனைத்து பிரதிநிதிகளும் பாராட்டினர்.

ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகவுள்ள அனைத்து துறைகளிலும் துரித அபிவிருத்தியை அடைந்து நாட்டை முன்கொண்டு செல்லும் முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர் (ஊடகம்)
2020.01.14 


3 comments:

  1. 04 பிரதான நாடுகளின் வௌிநாட்டு அமைச்சர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களில் சனாதிபதியின் கருத்துக்களை அவர்கள் பாராட்டினார்கள் என்பது தவிர அந்த நான்கு பேரும் என்ன வேண்டுகோளை விடுத்தனர். அதற்கு என்ன பதில் வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடப்படவில்லை. அப்படியானால் ஒரு பகுதியின் செய்திகள் கலந்துரையாடலைப் பிரநிநிதிப்படுத்தமாட்டாது.

    ReplyDelete
  2. மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களே இது அரசியல் நிகழ்வு அல்ல அரசியல் பகிர்வு

    இந்த நான்கு முதலைகளும் நம்நாட்டை முழுமையாக நான் விழுங்க வேண்டும் நான் விழுங்க வேண்டும் என்று போட்டிபோட ஆரம்பித்துவிட்டது

    நாம் தற்போது விழிப்ஙுணர்வு பெறாவிட்டால் நமது நாடும் அடுத்த லிபியா சிரியா இராக்காகிவிடும் நமது நாட்டில் பல்லினமக்கள் வாழ்வதால் அதில் மதரீதியான கொள்கைரீதியான பிரச்சினைகளை நமக்கிடையில் அமெரிக்க நரி உண்டாக்கிவிடும்

    ரசியா,சீனா,ஜப்பான் நமது அண்டைவீட்டார்கள் அனுசரிப்பது நன்று

    இந்த உலக மகா கள்ளன் எங்கோ உள்ள அமெரிக்கா ஏன் தற்போது நமது நாட்டில் நுழைய முயல்கின்றான்

    ReplyDelete

Powered by Blogger.